cinema

img

பிராமணியத்தை ஒழித்தால்தான் மக்களிடையே சமத்துவம் உருவாகும்... டுவிட்டரில் கன்னட நடிகர் சேட்டன் குமார் அதிரடி...

பெங்களூரு: 
கன்னட நடிகர் சேட்டன் குமார், சினிமாவைத் தாண்டி அரசியல் தொடர்பான கருத்துக்களை அதிகம் தெரிவிக்கக் கூடியவர். ‘ரணம்’, ‘அதிரதா’ உள்ளிட்ட பலகன்னட படங்களில் நடித்துள்ள இவர்,முற்போக்கான கருத்துக்கள் மற்றும் சமூகப் பிரச்சனைகளை டுவிட்டரில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.அந்த வகையில், ‘பிராமணிய ஆதிக்கம்’ குறித்து டாக்டர் அம்பேத்கர் மற்றும்தந்தை பெரியார் கூறிய கருத்துக்களை அண்மையில் டுவிட்டரில் அவர் பதிவிட்டிருந்தார்.

‘பிராமணியம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை மறுக்கக் கூடியது; எனவே, அந்தபிராமணியத்தை நாம் வேரறுக்க வேண்டும்’ என்று டாக்டர் அம்பேத்கர் கூறியதையும், ‘மக்கள் எல்லோரும் சமமாகப் பிறந்தாலும், பிராமணர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள்; மற்ற அனைவரும் தீண்டத்தகாதவர்கள் என்று சொல்வது மிகப்பெரிய முட்டாள்தனம்; இது ஒரு பெரிய புரளி-ஏமாற்று’ என்று பெரியார் கூறியதையும் மேற்கோள்காட்டி கருத்து தெரிவித்திருந்தார்.

நடிகர் சேட்டன் குமாரின் இந்த கருத்தை வைத்து, பாஜக மற்றும் சங்-பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர். சேட்டன்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று பிராமண முன்னேற்ற சங்கத்தின்தலைவர் சச்சிதானந்த மூர்த்தி பெங்களூரு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகாரும் அளித்துள்ளார்.ஆனால், ‘நான் உண்மையான விஷயங்களை மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறேன். சமூக பொருளாதார அல்லது பாலினம் ரீதியான அநீதி சமுதாயத்தில் இருக்கக் கூடாது. சமத்துவத்திற்கு எதிரானஅநீதி நீடிக்கக் கூடாது. கல்வி மூலம் மக்களை முன்னேற்ற வேண்டும். உலகை நல்வழிப்படுத்த வேண்டும். பாகுபாடற்ற ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது ஆசை, அதையே நான்வெளிப்படுத்தியுள்ளேன்’ என்று சேட்டன்குமார் மீண்டும் தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளார்.

;