cinema

img

வெளியான நடிகர் சிம்புவின் மாநாடு பட ட்ரெய்லர்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் சிம்பு, அப்துல் காலிக் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவிற்கு ஜோடியாகக் கல்யாணி நடித்துள்ளார். இவர் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் ஒய்.ஜி.மனேந்திரன், வாகை சந்திரன் சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், உதயா மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை யுவனின் யு1 ரெக்கார்ட்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் துவங்கியது. இந்நிலையில் ‘மாநாடு’ படத்தின் தமிழ் டிரெய்லரை இயக்குநர் ஏ.ஆர் முருகதாசும், மலையாளம் டிரெய்லரை நடிகர் நிவின் பாலியும் தெலுங்கில் நடிகர் நானியும், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டியும் வெளியிட்டுள்ளனர். 

;