cinema

img

தமிழ் திரைப்பட நடிகர் மனோபாலா காலமானார்

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான மனோபாலா (69) உடல்நலக் குறைவால் காலமானார்.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்ட நடிகர் மனோபாலா. இவர் இயக்குநர் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து, 1982ல் ஆகாய கங்கை என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் ஊர்க்காவலன், பிள்ளை நிலா, என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் உட்பட 24 படங்களை இயக்கியுள்ளார். 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். 

இந்த நிலையில், மனோபாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக வீட்டிலிருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் காலமானார்.
 

;