districts

img

வெப்படையில் ஐடிஐ கல்லூரி அமைத்திடக்கோரி ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் தீர்மானம்

நாமக்கல், ஜூலை 3- வெப்படையில் ஐடிஐ கல்லூரி அமைக்க  வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை செங்குந்தர் சமு தாயக்கூடத்தில் இந்திய ஜனநாகய வாலிபர் சங்கத்தின் பள்ளிபாளையம் வடக்கு ஒன் றிய 5 ஆவது மாநாடு நடைபெற்றது. ஒன்றிய  தலைவர் எம்.செந்தில் தலைமை வகித்து,  மாநாட்டுக்கொடியை ஏற்றி வைத்தார். கிளைச்செயலாளர் ராஜ்தேவ் வரவேற்பு ரையாற்றினார். ஒன்றிய செயலாளர் மு. மணிகண்டன் வேலை அறிக்கையினை முன் வைத்தார். வாலிபர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எம்.கற்பகம், மாவட்ட தலைவர்  இ.கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இதில், வெப்படையில் ஐடிஐ கல்லூரி அமைக்க வேண்டும். வெப்படை நால்ரோடு  பேருந்து நிறுத்த பகுதியில் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும். ஈக்காட்டூர் குடியி ருப்பு பகுதிகளில் முறையான சாக்கடை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின்s ஒன்றிய தலைவராக கவின்ராஜ், செயலாளராக  ராஜ் தேவ், பொருளாளராக செல்லப்பன், துணைத் தலைவராக குணசேகர், துணைச் செயலா ளராக அமிர்தராஜ் ஆகியோர் அடங்கிய 15 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய் யப்பட்டது. நிறைவாக, கிளைச் செயலாளர் நவீன் நன்றி கூறினார்.

;