districts

img

அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை அரசு இணைக்க வேண்டும்

திருப்பூர், ஜூன் 3- அவிநாசி - அத்திக்கடவு திட்டத் தில் விடுபட்ட குளம், குட்டைகளை அரசு இணைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க  வடக்கு ஒன்றிய பேரவை ஞாயி றன்று காலை 11 மணி அளவில் பெரு மாநல்லூர் தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது. மாநாட் டிற்கு ஒன்றிய தலைவர் கே.ரங்க சாமி தலைமை வகித்தார். ஒன்றிய  பொருளாளர் ஆர்.ஆறுமுகம் வர வேற்புரை ஆற்றினார். துணைத் தலைவர் ஆறுமுகம் துணைச் செய லாளர் கோவிந்தசாமி, நடராஜ், அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் கே.சுப்பிரமணி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் செயலாளர் எஸ்‌. வெங்கடாசலம் துவக்கவுரை ஆற் றினார்கள். ஒன்றிய செயலாளர் எஸ்.அப்புச்சாமி வேலை அறிக்கை முன்வைத்தார். சிஐடியு பஞ்சாலை சங்க மாவட்ட பொருளாளர் கே. பழனிசாமி, அனைத்து துறை ஓய்வு தியர் சங்க மாவட்ட தலைவர் க. சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் புதிய நிர்வாகிக ளாக தலைவர் கே.ரங்கசாமி, செய லாளர் பொங்குபாளையம் எஸ்.அப்புசாமி, பொருளாளர் ஆர்.ஆறு முகம், துணைத் தலைவர் பஞ் சாலை கே‌.பழனிசாமி, துணைச் செயலாளர் எம்.கே.கோவிந்தசாமி ஆகியோரும் 10 கமிட்டி உறுப்பினர் களும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், அவினாசி அத்திக்கடவு திட்டத்தில் திருப்பூர் வடக்கு ஒன் றிய பகுதியில் விடுபட்ட குளம் குட் டைகளை இணைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். வேளாண்மை மற்றும் தோட் டக்கலை துறை மூலம் நடைபெற்று  வரும் திட்டங்கள் விதைகள், இடு பொருட்கள், கருவிகள் அனைத் தும் விவசாயிகளுக்கு தெரியப் படுத்தி முறையாக விநியோகம் செய்ய வேண்டும். கால்நடை மருத் துவமனையில் உள்ள காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும். பெரு மாநல்லூர், பூலுவபட்டி, வாவிப்பா ளையம் பகுதியில் கோமாரி நோய்க்கு உரிய காலத்தில் தடுப் பூசி போட வேண்டும். உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலம் பயிர்க ளுக்கு அரசாணை எண் 54/2020ன் படி பத்து மடங்கு இழப்பீடு வழங்க  வேண்டும். கோவை மாவட்டத்தை போல் பாதிக்கப்பட்ட நிலங்க ளுக்கு கிராமத்தின் அதிகபட்ச வழி காட்டி மதிப்பை கணக்கில் எடுத்துக் கொண்டு உரிய இழப்பீடும், மாத வாடகையும் வழங்க வேண்டும். பெருமாநல்லூர் அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் அவசர சிகிச்சை பிரிவு துவக்கப்பட வேண்டும் உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.  மாநாட்டின் நிறைவாக த.வி.ச. திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர். குமார் சிறப்புரையாற்றினார். சிஐ டியு நிர்வாகி பி.கே.கருப்புசாமி நன்றி தெரிவித்தார்.

;