districts

img

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்திடுக

தருமபுரி, ஜூலை 3- புதிய பென்சன் திட்டத்தை ரத்து  செய்து, பழைய பென்சன் திட் டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலி யுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் 20 ஆம் ஆண்டு எழுச்சி நாளை  முன்னிட்டு, தருமபுரி சிஐடியு அலு வலகத்தில் கருத்தரங்கம் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தின் மாவட்ட தலைவர் எம்.சுருளி நாதன்‌ தலைமை வகித்தார். இதில், மாநில துணைத்தலைவர் கோ. பழனியம்மாள், மாவட்ட பொருளா ளர் கே.புகழேந்தி, மாவட்ட துணைத் தலைவர்கள் தீ.சண்முகம், சி.காவேரி, மாவட்ட நிர்வாகிகள் முனிராஜ், மகேஸ்வரி உட்பட பலர் கலந்து  கொண்டனர். இந்த கருத்தரங் கில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட் டத்தை அமல்படுத்த வேண்டும். சத் துணவு, அங்கன்வாடி, ஊர்புற நூல கர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், கிராம உதவியாளர்கள், குழந்தை கள் பாதுகாப்பு திட்ட ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரை யறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு சட்டப்படி யான ஓய்வூதியம் வழங்க வேண் டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி, ஊராட்சி ஆகிய அலுவல கத்தில் பணிபுரியும் ஊழியர்க ளுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டது.

கோவை

இதேபோல் கோவை தாமஸ் கிப்பில் நடைபெற்ற கருந்தரங் கிற்கு சங்கத்தின் பொறுப்பு தலை வர் ச.ஜெகநாதன் தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் பி.செந் தில்குமார் வரவேற்புரையாற்றி னார். மாநிலச் செயலாளர் அ. குபேரன் சிறப்புரையாற்றினார். இதில், அரசு ஊழியர் சங்க மாவட்ட மற்றும் வட்ட நிர்வாகிகள், தொழிற் சங்க மற்றும் ஆசிரியர் அமைப்பு மாநில, மாவட்ட, வட்டக் கிளை நிர் வாகிகள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக, மாவட்ட பொருளாளர் ப.நடராஜன் நன்றி கூறினார்.

;