districts

img

அடிப்படை வசதிகள் செய்து தர மறுக்கும் நகராட்சி

இளம்பிள்ளை, ஜூலை 3-  தலித் மக்கள் குடியிருப்பு என்ப தால் அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு இடங்காணசாலை நக ராட்சி நிர்வாகம் மறுப்பதாக குற் றச்சாட்டு எழுந்துள்ளது.  சேலம் மாவட்டம், சங்ககிரி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட இடங்கண சாலை நகராட்சி 21 ஆவது வார்டு காடையாம்பட்டியில் 300 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும் பங்கள் வசித்து வருகின்றன.  அப் பகுதி மக்கள் ஆதிதிராவிடர் வகுப் பைச் சேர்ந்தவர்கள் என்பதால், தங்களுக்கு எந்தவித அடிப்படை வச திகளும் இதுவரை செய்து தரப்பட வில்லை என குற்றம்சாட்டினார். இப்பகுதியில்  தெருவிளக்குகள் கிடையாது. இருக்கிற தெருவிளக்கு களும் எரியாது. முற்புதர்கள் உள்ள இந்த பகுதியில்  விஷ பூச்சிகள்  நட மாட்டம் அதிகம் உள்ளது. எவ்வித மான பாதுகாப்பும் இல்லாமல் இரவு நேரங்களில் சாலையில் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. குடிப்ப தற்கு கூட முறையாக தண்ணீர் வசதி இல்லை. 20 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருகிறது. அது வும் 300 வீடுகளுக்கும் ஒரே ஒரு  இடத்தில் பைப்லைன் அமைக்கப் பட்டுள்ளது. இதனால் பெரும் சிர மத்திற்கு உள்ளாகி வருவதாக தெரி வித்தனர்.

300 குடும்பங்களைச் சேர்ந்த ஆண், பெண் இருவருக்கும் ஒரே ஒரு பொதுக்கழிப்பறை வசதி மட் டும் உள்ளது. அதை பெண்கள் மட்டும் பயன்படுத்தி கொள்கின்ற னர். மற்றவர்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் சூழ்நிலை உருவா கிறது. மேலும், சாலை புதுப்பிக் கப்படாமல் நீண்ட வருடங்களாக இருந்து வருகிறது. இடுகாட்டிற்கு செல்வதற்கு போதிய சாலை வசதி இல்லாமல் மிகவும் சிரமம் பட்டு வருகின்றனர். சாக்கடை போன்ற எவ்வித அடிப்படை வசதியும் இல் லாமல் தவித்து வருவதாக அப் பகுதி பொது மக்கள் குறை கூறினர். இடங்கணசாலை நகராட்சி முழு வதும் மக்கள் பிரதிநிதிகள், அதி காரிகள் நேரில் சென்று ஆய்வு செய்கின்றனர். எங்கள் பகுதிக்கு இதுவரை வந்து என்னவென்று கேட்கவே இல்லை என வேதனை யுடன் தெரிவிக்கின்றனர் இதுகுறித்து அப்பகுதி கிராம  மக்கள் இடங்கணசாலை நகராட்சி,  மாவட்ட ஆட்சியர், முதல்வர் தனிப் பிரிவு உள்ளிட்ட இடங்களில் மனு அளித்தும் இதுவரை எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ஆதிதிராவிட மக்க ளுக்கு உரிய அடிப்படை வசதி களை செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -தியாகு, இளம்பிள்ளை.

;