தேசம்

img

தீக்கதிர் விரைவுச் செய்திகள்

பங்குச் சந்தை கடும் சரிவு
புதுதில்லி:

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் செவ்வாயன்று 37 ஆயிரத்து 641 புள்ளிகளில் நிறைவு அடைந்திருந்தது. ஆனால், புதன்கிழமையன்று வர்த்தக நேர முடிவில், 189 புள்ளிகள் சரிந்து,37 ஆயிரத்து 451 ஆக சரிவைச் சந்தித்துள்ளது. இதேபோல தேசிய பங்குச்சந்தையான நிப்டி 11 ஆயிரத்து 105 புள்ளிகளில் முடிவடைந்து இருந்தது. இதுவும் புதனன்று 59 புள்ளிகள் குறைந்து, 11 ஆயிரத்து 46 புள்ளிகளாக வீழ்ச்சி கண்டுள்ளது.

வாஜ்பாய்  பங்களாவில் அமித் ஷா!
புதுதில்லி:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தில்லி கிருஷ்ணமேனன் மார்க் பகுதியில் ஒதுக்கப்பட்ட பங்களாவில் கடந்த 14 ஆண்டுகளாக தங்கியிருந்தார். கடந்த ஆண்டு அவர் மறைந்ததற்குப் பிறகு,அந்த பங்களா காலியாகஇருந்தது. இந்நிலையில்,வாஜ்பாய் தங்கியிருந்தபங்களாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குடிபெயர்ந்துள்ளார். 

எடியூரப்பாவுக்கு எதிராக திரண்ட பாஜக-வினர்
பெங்களூரு,:

கர்நாடகத்தில், கோவிந்த் கார்ஜோள், லட்சுமண் சாவடி, அஸ்வத்நாராயண் ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதால், ஏனைய மூத்த அமைச்சர்களான ஆர்.அசோக், ஜெகதீஷ் ஷெட்டர், சி.டி. ரவி, ஈசுவரப்பா, ஸ்ரீராமுலு உள்ளிட்டவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், இவர்களின் ஆதரவாளர்கள் பெல்லாரி, ஒசப்பேட்டே, கொப்பல், சித்ர துர்கா, யாதகிரி, சிக்கமகளூரு உள்ளிட்ட இடங்களில் எடியூரப்பாவுக்கு எதிராக போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
 

;