தலையங்கம்

img

​​​​​​​மோடி அமெரிக்காவிடம் மேலும் சரணாகதி -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

அரசுத்துறை செயலாளர் ஒருவர் அமைச்சராக உயர்த்தப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும். ஜெய்சங்கர் அமெரிக்க ஆதரவு பேர்வழி என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். அயல்துறை விவகாரங்கள் அமைச்சகத்தில் அவர் அயல்துறை செயலாளராகப் பணியாற்றிய சமயத்தில், அமெரிக்காவுடன் போர்த்தந்திர உறவுகளை நெருக்கமாக்கிக் கொள்வதற்கு எந்த அளவிற்கு அவர் நடவடிக்கைகள் மேற்கொண்டார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.  

மோடி-2 அரசாங்கத்தின் செயல்பாடுகள், அமெரிக்க அரசாங்கத்தின் இளைய பங்காளியாக இருப்பதில் மேலும் மோசமான முறையில் சரணாகதி அடையக்கூடிய விதத்தி லேயே அமைந்திருக்கப் போகிறது என்பதை  அதன் நிகழ்ச்சிப் போக்குகள் தெளிவாகக் காட்டுகின்றன. இதனைத் தொடர்ந்து, நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்கள் அமலாக்கமும் அதனால் மக்களின் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதல்களும் மேலும் விரைவாக அதிகரித்திடும். 2014-19ஆம் ஆண்டுகளில், மோடி அரசாங்கமானது அமெரிக்காவுடன் போர்த்தந்திர ரீதியாகவும் (strategically) ராணுவரீதியாகவும்  (militarily), சரணாகதி அடையக் கூடிய விதத்தில்,  தன்னுடைய வான்வழி மற்றும் நீர்வழிப் போக்கு வரத்துகளில்  அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்க ளில் கையெழுத்திட்டதன்மூலம் கணிசமான நடவடிக்கைக ளை எடுத்திருந்தது. மேலும் அமெரிக்கா கட்டளையிட்டதற்கி ணங்க, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் அமெரிக் கா ஆகிய நான்கு நாடுகளுக்கிடையிலான ராணுவக் கூட்ட ணியிலும் இந்தியா தன்னை இணைத்துக் கொண்டது.

பூகோள அரசியல் மாற்றியமைப்பு

இத்தகைய நடவடிக்கைகள், நம் நாட்டின் அயல்துறைக் கொள்கையை, ஆசியப் பசிபிக் பிராந்தியத்தில் முற்றிலு மாக அமெரிக்காவின் பூகோள அரசியல் (geo-political) நலன்களுடன் ஒத்துப்போகக் கூடியவிதத்தில் மாற்றி அமைத்திருக்கிறது. அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு, இந்தியா தனக்குத் தேவையான ராணுவத் தளவாடங்களை இதுநாள் வரையிலும் வாங்கிவந்த நாடுகளை, குறிப்பாக ரஷ்யாவை, உதறித்தள்ளிவிட்டு, அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது.    உள்நாட்டு விவகாரங்களைப் பொறுத்தவரை, மோடி அரசாங்கம் அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கப் பொருளாதார நலன்களுக்குச் சேவகம் செய்யும் விதத்திலேயே எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்தது. 2018 ஜனவரியில் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், “அமெரிக்கா முதல்” (“America First”)  மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புவாதக் கொள்கைகள் (prote ctionist policies)  அடிப்படையில் அமெரிக்கா, இந்தியா விற்கு  அதிக அளவில் கட்டளைகளைப் பிறப்பித்தது. சீனப் பொருள்களுக்கு 250 பில்லியன் டாலர்கள் வரி விதித்திருப்பதன் மூலம் அதற்கு எதிராக வர்த்தகப் போர் தொடங்கி இருக்கிறார் டிரம்ப். இவ்வரியை 325 பில்லியன் டாலர்களாக மேலும் உயர்த்தப் போவதாகவும் மிரட்டிக் கொண்டிருக்கிறார். அமெரிக்கப் பொருள்களை சீனச் சந்தை யில் புழக்கத்திற்கு விடுவதற்கு மேலும் வாய்ப்புகளை அதி கப்படுத்திட வேண்டும் என்றும், அமெரிக்காவின் தொழில் நுட்பம் மற்றும் அறிவுச்சொத்து உரிமைகளுக்குப் பாதுகாப்பு கள் அளித்திட வேண்டும் என்றும் டிரம்ப் கோரியிருக்கிறார்.

முதல்கட்ட உயர்வு
 

டிரம்ப் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தி யாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை மறுதலிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா, தன்னுடைய வரிகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும்,  அமெரிக்கப் பொருள்களை அதிக அளவில் இறக்குமதி செய்திட வேண்டும் என்றும் கோரியிருக்கிறார். இதற்காக அவர், இந்தியாவிலி ருந்து அமெரிக்கா இறக்குமதி செய்திடும் அலுமினியம் மற்றும் உருக்கு ஆகியவற்றுக்கான வரிகளை முதல்கட்ட மாக உயர்த்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, இந்தியா, அமெரிக்காவிற்கு பல்வேறு இனங்களை எவ்வித வரியு மின்றி ஏற்றுமதி செய்திட வேண்டும் என்றும் அமெரிக்கா கட்ட ளையிட்டிருக்கிறது. இவ்வாறு சுமார் 1900 வகையிலான பொருள்கள் எவ்வித வரிவிதிப்புமின்றி இந்தியாவிலிருந்து, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பு அமெரிக்காவில் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் செய்யப்பட்டது என்பதும் இது 60 நாட்க ளுக்குப் பின்னர் அமலுக்கு வரும் என்பதும்  குறிப்பிடத் தக்கது. எனினும் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மோடி அர சாங்கம் இதுவரை வாயே திறக்கவில்லை என்பது மட்டுமல்ல, இதற்கு எதிராக எவ்வித எதிர் நடவடிக்கையும் எடுத்திடவும் இல்லை.   ஆனால் இதற்கு முற்றிலும் எதிரானமுறையில் சீனா, அமெ ரிக்காவின் அடாவடித்தன நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்வினையாற்றி இருக்கிறது. சீனாவிற்குள் நுழையும் அமெரிக்காவின் பொருள்களுக்கு  வரி விதித்திருப்பதன் மூலம் சீனா பதிலடி கொடுத்திருக்கிறது. இந்தியா, அமெரிக்காவின் போர்த்தந்திரம் மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் அதன் இளைய பங்காளியாக மாறியதன் விளைவாகவே மோடி அரசாங்கத்தால் அமெ ரிக்காவின் அடாவடித்தனங்களைத் துணிவுடன் எதிர்த்து நிற்க முடியாத பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது.

முணுமுணுப்பேதுமின்றி

“மாபெரும் தேசியவாதி” என சித்தரிக்கப்படுகின்ற நரேந்திர மோடி, அமெரிக்கா பிறப்பிக்கும் கட்டளைகள் ஒவ் வொன்றையும் எதிர்ப்பேதும் கூறாது, கைகட்டி வாய் பொத்தி, ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று இந்தியாவிற்கு  அமெரிக்கா கட்டளை யிட்டது. அதனை எவ்வித முணுமுணுப்புமின்றி இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் பொருளாதாரரீதியாக இந்தியா கடுமையாகப் பாதிக்கப்படும். ஏனெனில் சர்வதேச சந்தையின் விலையுடன் ஒப்பிடுகையில் இந்தியா, ஈரானி டமிருந்து மிகக் குறைந்த விலையில் எண்ணெய் வாங்கிக் கொண்டிருந்தது. இதனைத்தொடர்ந்து இப்போது அமெ ரிக்கா, வெனிசுலாவிற்கு எதிராக தான் நடத்தும் பொருளா தார யுத்தத்தின் அடிப்படையில்,  இந்தியாவை, வெனிசுலா விடமிருந்தும் எண்ணெய் வாங்கக்கூடாது என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது. இக்கட்டளைக்கும் செவிசாய்த்திட மோடி அரசாங்கம் துரிதகதியில் நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டி ருக்கிறது. இந்தியா, ரஷ்யாவிடமிருந்து டிரயம்ப் எஸ்-400  ஏவு கணை முறையை வாங்குவதன் காரணமாக, இந்தியா விற்கு, பொருளாதாரத் தடை எதையும் அமெரிக்கா விதித்திடக் கூடாது என்று இந்தியா, அமெரிக்காவிடம்  கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆயினும் இதற்கு அமெரிக்கா இணங்கிட வில்லை. இந்தியாவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிப்போம் என மிரட்டிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு நிர்ப் பந்திப்பதற்கு, மிக முக்கிய காரணம், அமெரிக்காவிடமி ருந்து மிகப்பெரிய அளவில் ராணுவத் தளவாடங்கள் இந்தியாவை வாங்க வைத்திட வேண்டும் என்பதேயாகும்.   (இந்தியா ரபேல் போர் விமானங்கள் 36 மட்டுமே வாங்கியதைத் தொடர்ந்து) இந்தியாவை தன்னுடைய எஃப்-21 போர் விமானங்களை வாங்க வைத்திடுவதற்காக அமெரிக்கா தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து வருகிறது. இதன் மூலமாக பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந் தத்தை இந்தியாவை மேற்கொள்ளச் செய்திட வேண்டும் என்று  அமெரிக்கா விரும்புகிறது.   

அமெரிக்க அமைச்சர் வருகை
இவற்றை நிறைவேற்றுவதற்காக, அமெரிக்க அர சாங்கத்தின் அமைச்சர் மைக் பொம்பியோ ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் இந்தியா வருகிறார். மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமரானபிறகு  அவர் விஜயம் செய்யும் முதல் பயணமாகும் இது. அமெரிக்காவின் வர்த்தக நலன்களை நிறைவேற்றுவதற்கு வழிசெய்யும் விதத்தில் இந்தியா மீது தேவையான நிர்ப்பந்தங்களை அவர் மேற் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியா ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகள் வாங்குவதற்கு ஈடு செய்யும் விதத்தில் மிக அதிக அளவில் அமெரிக்காவிட மிருந்து ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்கும், இந்தி யாவில் 5ஜி அலைக்கற்றை வரிசைகளை அறிமுகப் படுத்துவதற்காக இந்தியா சீனாவின் பகாசுரக் கம்பெனியான ஹுவாவேய் (Huawei)-யிடமிருந்து கருவிகள் வாங்குவ தைத் தடுத்திடவும் அவர் முயற்சிகளை மேற்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மோடி-2 அரசாங்கம் தற்போது புதியதொரு அயல்துறை விவகாரங்கள் அமைச்சரைப் பெற்றிருக்கிறது. எஸ்.ஜெய்சங்கர் என்கிற இவர் முன்னாள் அயல்துறை செயலாளர்தான்.   அரசுத்துறை செயலாளர் ஒருவர் அமைச்சராக உயர்த் தப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும். ஜெய்சங்கர் அமெரிக்க ஆதரவு பேர்வழி என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். அயல்துறை விவகாரங்கள் அமைச்சகத்தில் அவர் அயல்துறை செயலாளராகப் பணியாற்றிய சமயத்தில், அமெரிக்காவுடன் போர்த்தந்திர உறவுகளை நெருக்கமாக்கிக் கொள்வதற்கு எந்த அளவிற்கு அவர் நடவடிக்கைகள் மேற்கொண்டார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.   டிரம்ப் நிர்வாகத்தின் அடாவடித்தனமான கட்டளை கள் அனைத்திற்கும் மோடி அரசாங்கம் இதுவரை யிலும் முழுமையாகக் கைகட்டி வாய்பொத்தி சரணாகதி அடைந்திருக்கும் அணுகுமுறையானது, இந்தியா அமெ ரிக்காவின் போர்த்தந்திர மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் அதன் இளைய பங்காளியாகத் தொடரும் என்பதையே காட்டு கிறது. இவ்வாறு இந்தியாவின் நலன்கள் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் நலன்களுக்கு சேவகம் செய்யக்கூடிய விதத்தில், அடகு வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

(ஜூன் 5, 2019) 
தமிழில்: ச.வீரமணி

;