தமிழகம்

img

கொரோனா வார்டில் நொண்டி விளையாட்டு...  தூத்துக்குடியில் சுவாரஸ்யம்...  

தூத்துக்குடி
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் சென்னையில் மையம் கொண்டுள்ள கொரோனா வைரஸ் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் தனது பரவல் வேகத்தை அதிகரித்துள்ளது. இதனால் மாநிலத்தின் அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. 

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு மனஅழுத்தத்தை போக்கும் வகையில் யோகா உள்ளிட்ட கலைகளை செய்ய அனுமதி தரப்படுகிறது. ஆனால் சில இளசுகள் ஒருபடி மேலே சென்று வேறு விதமாக விளையாட செல்கின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகள் சிலர் மருத்துவமனை வளாகத்தில் நொண்டி விளையாடி வருகின்றனர். நொண்டி விளையாட்டால் எங்களின் மன அழுத்தம் குறைவதாக கொரோனா நோயாளிகள் கூறுகிறார்கள். இதனால் அம்மருத்துவமனை விளையாட்டு திடலாக மாறிப்போய் இருக்கிறது. 

ஏற்கெனவே கடலூர் கொரோனா முகாம் விடுதியின் மொட்டைமாடியில் கொரோனா நோயாளிகள் கபடி விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

;