தமிழகம்

img

வரவு செலவு செய்ய முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது

 திருநெல்வேலி:
வரலாற்றை திருத்தி எழுதுவது, மாற்ற நினைப்பது கிரிமினல் நடவடிக்கை, இதுபோன்ற நடவடிக்கைகளை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசு  வரவு-செலவை சமாளிக்கமுடியாமல் திணறிவருகிறது என்றும் நெல்லையில் நவம்பர் புரட்சி தின விழாவில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
வரலாற்றை திருத்தி எழுதுவது மாற்ற நினைப்பது கிரிமினல் நடவடிக்கை. இதுபோன்ற நடவடிக்கைகளை  தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது. தமிழகத்தின் வரலாறு பாதுகாக்கப்பட வேண்டும். பணமதிப்பிழப்பு கொண்டு வந்து மூன்று ஆண்டுகளாகியும் விளைவுகள் மோசமாகதான் உள்ளது. சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆசிய நாடுகளுடன் பொருளாதார ரீதியிலான இணைப்பை இந்தியா பெறமுடியாத நிலை இருந்து வருகிறது.படித்து வேலை இல்லாதோர் எண்ணிக்கை பாஜக ஆட்சியில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பி.எச் டி பட்டதாரிகள் வீடுகளுக்கு சாப்பாடு  கொண்டு சென்று ஊதியம்பெறும்  அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் இருந்து வருகிறது.ராமர் பூமி, ராமருக்கான பூஜை, திருவள்ளுவருக்கு காவி உடை. இதுதான் பாஜகஅரசியலாக இருக்கிறது. இது போன்ற விசயங்கள் நாட்டிற்கு அழிவை ஏற்படுத்தும் . ரிசர்வ் வங்கியில் உள்ள பணத்தை எடுத்து பாஜக அரசு செலவு செய்து வருகிறது.மத்திய அரசு வரவு செலவு செய்யமுடி யாமல் திணறி வருகிறது. தாமிரபரணி நதிக்கரையில் நடந்த அகழ்வாய்வுக்கான பணிகளை தொடரவேண்டும் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை  வைக்கப் படும்  எனத் தெரிவித்தார்.

;