தமிழகம்

img

மாநகர போக்குவரத்து பணியாளர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு

சென்னை:
சென்னை மாநகரப் போக்குவரத்து பணியாளர்கள் 50 விழுக்காட்டினரை பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து மேலாண்மை இயக்குநர் உத்தரவில், “கொரோனா காரணமாக சென்னை மாநகரப் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. 
இந்த நிலையில் 1,775 பேருந்துகள் காலாவதியாகும் நிலையில் இருப்பதால், அவற்றைப் புதுப்பித்து ஆய்வு சான்றிதழ் வழங்க 50 விழுக்காடு பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும்.அப்படி பணிக்கு வரும் பணியாளர்கள் முகக் கவசம், கை உறை கட்டாயம் அணிய வேண்டும். கிருமி நாசினிகள் கொண்டு கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

;