தமிழகம்

img

வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்ட மசோதாவின் அம்சங்கள்

இந்த சட்டம் 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் என அழைக்கப்படுகிறது. இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இந்த சட்டத்தில் ‘வேளாண்மை’ என்பது உணவு தீவனம், நார்ப்பொருள், உயிரி எரிபொருள் மற்றும் வேளாண்-தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் ஆகியவற்றின் நோக்கத்திற்கு தாவரங்கள் அல்லது பயிர்கள் சாகுபடி, வேளாண்மை, தோட்டக்கலை அல்லது தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு அல்லது காடு வளர்ப்பு அல்லது பிற செயற்பாடுகள் மூலம் உற்பத்தி எதுவும் என்று பொருள்படுகிறது.

“வேளாண் நிலம்” என்பது வேளாண் பயன்பாட்டிலுள்ள அனைத்து நிலங்களும் என்று பொருளாகிறது.ந்த மசோதாவின்படி துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது ஆலை, ஒருங்கிணைந்த எக்கு ஆலை அல்லது இரும்பு உருக்காலை, செம்பு, அலுமினிய உருக்காலை, விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல், மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கை எரிவாயு ஆய்வு எடுத்தல், பிரித்தெடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.இந்த தடை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகியடெல்டா மாவட்டங்கள் முழுவதற்கும், கடலூர் மாவட்டத்தில்காட்டு மன்னார்கோவில், மேல் புவனகிரி, ப.கீரபாளையம், பரங்கிப் பேட்டை மற்றும் குமராட்சி வட்டாரங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், மணமேல்குடி, திருவரங்குளம் மற்றும் கரம்பக்குடி வட்டாரங்களுக்கும் இந்த தடை பொருந்தும்.

வேளாண் மண்டல சட்டம் நடைமுறைக்கு வரும் தேதிக்கு முன்னர், இப்பகுதியில் செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு பாதிப்பு இல்லை. துறைமுகம் , குழாய் இணைப்பு, சாலை, தொலைத் தொடர்புகள், மின்சாரம், நீர் வினியோகம் போன்ற உள்கட்டமைப்பு ஆகியவை இந்த சட்டத்தினால் பாதிக்கப்படாது.இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் நிறைவேற்றுவதற்கு பின்வருமாறு உறுப்பினர்களை உள்ளடக்கிய ‘தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அமைப்பு’ என்ற பெயரில் ஓர் அதிகார அமைப்பு உருவாக்கப்படுகிறது.முதலமைச்சரை தலைவராக கொண்டு, துணை முதலமைச்சர், நிதித்துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர், வேளாண்மை துறை அமைச்சர் உள்ளிட்ட 13 உறுப்பினர்கள் இந்த அதிகார அமைப்பில் இடம் பெறுவார்கள்.இந்த அமைப்புக்கு உதவ மாவட்ட ஆட்சியர், வேளாண் துறை இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர், தோட்டக் கலைத்துறை துணை இயக்குநர் உள்ளிட்டோர் அடங்கிய மாவட்ட அளவிலான குழு அமைக்கப்படுகிறது.

;