tamilnadu

img

தி.நகரில் மின் இணைப்பின்றி 100 குடும்பங்கள் பரிதவிப்பு!

தி.நகரில் மின் இணைப்பின்றி 100 குடும்பங்கள் பரிதவிப்பு!

5 தலைமுறையாக வசிக்கும் மக்களுக்கு சொத்து வரி விதிக்க கோரிக்கை

வெளிச்சத்திற்காக காத்தி ருக்கும்  தி.நகர் பகுதி யில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள். 1970களில் சென்னையில் உள்ள குடியிருப்பு பகுதிகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து அரசு நிலம், புறம்போக்கு, தனியார், அனா தீனம், வழிபாட்டு நிலம் போன்றவற்றை  குடிசைப் பகுதியாக அறிவித்து மேம்படுத்தப்பட்டது. அரசு மற்றும் புறம்போக்கு நிலங்க ளில் வசித்தவர்களுக்கு தமிழ்நாடு  குடிசைமாற்று வாரியம் (தற்போது  நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யம்) மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்பட்டது. தனியார் நிலங்களில், ஆட்சேபனை இல்லாத பகுதிகள் மேம்படுத்தப்பட்டது. ஒருசில இடங்களில் தனியார் நிலம் கையகப்படுத்தி, குடிசைப்பகுதியாக அறிவித்து மேம்படுத்தப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி, 133வது வட்டம் தி.நகர், மாம்பலம் ரயில் நிலையம் - வடக்கு உஸ்மான் சாலைக்கு இடையே அமைந்துள்ள முத்துரெட்டி தோட்டம், தனக்கோட்டி யம்மாள் தோட்டம், ராஜூ பிள்ளை  தோட்டம் ஆகிய பகுதிகள் ஆட்சே பனைக்குரிய நிலத்தில் இருந்ததாக கூறி அரசு மேம்படுத்தவில்லை. இதனை பயன்படுத்திக் கொண்டு  பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை கைப்பற்ற, அவ்வப்போது குடிசைகளுக்கு தீ வைப்பது, ரவுடிகளை வைத்து மக்களை மிரட்டு வது, கூட்டமாக வந்து குடிசைகளை இடிப்பது, அரசு அதிகாரிகள் மூலம்  தொல்லை தருவது என பல வடிவங்க ளில் முயற்சித்து வருகின்றனர். “இந்த தோட்டப் பகுதிகளில் 5  தலைமுறைகளாக மக்கள் வசிக்கின்ற னர். எனவே, நிலத்தை முறைப்படுத்தி  குடியிருப்போருக்கு அரசு குடி மனைப் பட்டா வழங்க வேண்டும். பட்டா கேட்டு தமிழக அரசிடம் பல முறை மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பட்டா வழங்காமல் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, அடிப் படை தேவையான மின் இணைப்பு கூட மறுக்கப்படுகிறது. சொத்துவரி ரசீது இருந்தால்தான் இணைப்பு தரப்படும் என்பது சரியான வழி முறையல்ல. சொத்து வரி ரசீது இல்லா தவர்களுக்கு பொதுவான உறுதி மொழி பத்திரத்தின் அடிப்படையில் தற்காலிக இணைப்பு வழங்க வேண்டும். ஒரே குடும்பம் காலப்போக் கில் பல குடும்பமாக மாறுகிறபோது, மின் இணைப்பை ரத்த உறவு முறையை அடிப்படையாக வைத்து புதிய இணைப்பு தர வேண்டும். குறிப்பாக, முத்துரெட்டி தோட்டம்,  தனக்கோட்டியம்மாள் தோட்டங்களில் நில உரிமை தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம். அதுவரை தற்காலிக மின்  இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்க வேண்டும். நாகரிக சமூகத்தில் சென்னையின் மையப்பகுதியில் மின்சாரம் இன்றி மக்கள் இருப்பது ஆட்சிக்கு பெருமை  சேர்க்காது” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தி.நகர் பகுதிச் செயலாளர் எம்.குமார் கூறுகிறார். இந்தப் பகுதிகளில் மின்சாரம் கொடுக்க என்ன தடை? முத்துரெட்டி தோட்டம் 14 கிரவுண்ட்  பரப்பளவு கொண்டது. இங்கிருந்த குடிசைகளை 1982ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவு என்று கூறி ஒரு கும்பல் இடித்தது. இருப்பினும், சிபிஎம் தலைமையில் மக்கள் பெரும் போராட்டம் நடத்தி  மீண்டும் அந்த இடத்தில் குடிசைகளை  அமைத்து மக்கள் வாழ்ந்து வருகின்ற னர். தற்போது 60 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த இடம் தொடர்பாக 1984ல் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மாற்று இடம் தரா மல், அரசு அனுமதியின்றி மக்களை வெளியேற்றக் கூடாது என்று 1996ஆம்  ஆண்டு உத்தரவிட்டது. அதன்பிறகு  அங்கு தெரு விளக்கு அமைக்கப்பட்டு,  படிப்படியாக 20 வீடுகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டுதான் 21 குடும்பங்க ளுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்கப்பட்டது. 40  குடும்பங்கள் இத்தகைய இணைப்பு களின்றி உள்ளன. “சேறும் சகதியுமாக இருந்த பகுதியை செம்மைபடுத்தி, வீடு கட்டி 4வது தலைமுறையாக வசிக்கிறோம். 1996ஆம் ஆண்டு செல்லக்குமார் எம்எல்ஏ முன்முயற்சியால் முதலில் தெருவிளக்கு அமைக்கப்பட்டது. அதன்பிறகு எனது வீட்டிற்கு மின் இணைப்பு கிடைத்தது” என்று முதன்முதலில் மின் இணைப்பு பெற்ற ஆஷா கூறினார். “புதிய மின் இணைப்பு கோரினால்  சொத்துவரி ரசீது அல்லது தனியார்  நிலத்தின் உரிமையாளர் ஆட்சேபனை  இல்லா சான்று தர வேண்டும் என்கின்ற னர். இதனால் மின் இணைப்பு பெற முடியவில்லை. எனவே, சொத்துவரி விதிக்க வேண்டும்” என்று அங்கு வசிக் கும் ஆர்.தமிழ்ச்செல்வி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், “21 குடும்பங்க ளுக்கு மட்டும் கழிவுநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அடைப்பு ஏற்பட்டால் கூட சொந்த செலவில் அகற்ற வேண்டியுள்ளது. சொத்துவரி ரசீது இல்லை என்று கூறி தற்போது குடிநீர் வரியையும் வசூலிக்க மறுக்கின்றனர்” என்றும் புகார் தெரிவித்தார். 2009ஆம் ஆண்டு ரூ.100 கட்டணத் தில் குடிநீர், கழிவு நீர் குழாய் இணைப்பு  பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது இணைப்பு பெற நடந்த போராட்டத்தில் 7 பேர் மீது காவல்துறை  வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு  நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த  வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்க ளில் ஒருவரான நரேஷ் குறிப்பிடு கையில், “160சதுர அடி வீட்டில் 4 பேர்  வசிக்கிறோம். எங்கள் குடியிருப்பு களை சமூக விரோதிகள் மூலம் அகற்ற முயற்சிக்கின்றனர். 20 நாட்க ளுக்கு முன்பு கூட வழக்கறிஞர் என்ற  போர்வையில் சிலர் நிலத்தை அளவீடு  செய்ய வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலையீட்டால் குடி யிருப்புகள் தொடர்ந்து பாதுகாக்கப் பட்டு வருகிறது” என்றார். “புதியதாக  திருமணமாகி இங்கு  வந்தபோது முழங்கால் அளவிற்கு  சேறும் சகதியும் இருக்கும். அதிலி ருந்து கொஞ்சம் கொஞ்சமாக குடியிருப்பை மேம்படுத்தி வாழ்ந்து வருகிறோம். ஆனாலும் நடக்க சரி யான பாதை கூட இல்லை. அவ்வப் போது சிலர் வந்து தொந்தரவு தரு கிறார்கள். எனவே, அரசு பட்டா வழங்க வேண்டும்” என்று கோரிக்கை  வைக்கிறார் 70 வயதான கஸ்தூரி. “நடிகை படாப்பட்  ஜெயலட்சுமி யின் தாத்தா ரெட்டியார்தான் 80 ஆண்டு களுக்கு முன்பு இந்த இடத்தை எங்களுக்கு ஒதுக்கி கொடுத்தார். இப்போது சம்பந்தமே இல்லாமல்  யார்யாரோ உரிமை கொண்டாடுகின்ற னர்” என்கிறார் சமையல்கார பாட்டி சாந்தியம்மா. “ஒவ்வொரு தேர்தலின் போதும்  பிரச்சனையை தீர்ப்பதாக வாக்குறுதி  தருகிறார்கள். அரசு அறிவிக்கும் சிறப்பு முகாம்களில் மனு கொடுக்கி றோம். அதிகாரிகளை சந்தித்து முறை யிடுகிறோம். பல போராட்டங்களை நடத்துகிறோம். ஆனாலும் அடிப்படை  பிரச்சனைகள் தீராமல் உள்ளது. கழிவு நீர் அடைப்பு ஏற்பட்டால் கூட  அதை சரி செய்ய மறுக்கும் நிலையில் தான் அரசு நிர்வாகம் உள்ளது” என்றார்  சிபிஎம் பெண்கள் கிளைச் செயலாளர் ஆர்.ஜோதி. தனக்கோட்டியம்மாள் தோட்டம் முத்துரெட்டி தோட்டத்திற்கு அருகாமையில் 11 கிரவுண்ட் பரப்பில் உள்ள தனக்கோட்டியம்மாள் தோட்டத்தில், தற்போது 75 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த இடம் சர்வே எண் 5267/1 மற்றும் 5267/2ல் அமைந்துள்ளது. இதில் 5267/1 அரசு நிலமாக உள்ளது. 5267/2 நிலத்திற்கு மஞ்சுளா சேஷாத்திரி என்பவர் உரிமை கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 2004ல் நீதிமன்ற வழக்கு நடத்தி 27 பேர் மின் இணைப்பு பெற்றனர். அதனை தொடர்ந்து ஒரு சிலர் மின் இணைப்பு, குடிநீர், கழிவுநீர்  இணைப்பு பெற்றனர். இங்கு வசிப்பவர்களும் சொத்து வரி ரசீது இல்லாததால் மின் இணைப்பு  பெறமுடியவில்லை. இதுகுறித்து 65 வயதாகும் என்.வேலாயுதம் கூறு கையில், “ இந்திய விடுதலைக்கு முன்பு இந்த பகுதியில் குடியேறிய வர் எனது தாத்தா. எனது தந்தை மாடு வளர்த்துக் கொண்டே தலைமை  செயலகத்தில் வேலை செய்தார். ஆனாலும், தற்போதுவரை பட்டா கிடைக்கவில்லை. 28 பேர்  மின் இணைப்புக்காக  காத்திருக்கின்றனர். அந்த குடும்பங்க ளுக்கு சொத்துவரி விதித்து மின் இணைப்பு தர வேண்டும். நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அரசு பட்டா வழங்க வேண்டும்” என்றார். “வீடுகளுக்கு குடிநீர், கழிவு நீர் இணைப்பு இல்லை. இருப்பினும், குடிநீர் தொட்டியிலிருந்து தண்ணீர் பெறுகிறோம். பொதுக்கழிப்பிடம் மூலம் இயற்கை உபாதைகளை கழிக்கிறோம். ஆனால், மின்சாரத் திற்கு என்ன செய்வது?” என்று 140 சதுர அடி வீட்டில் வசிக்கும் ராதா கேள்வி எழுப்புகிறார். 180 சதுர அடி வீட்டில் வசிக்கும் சித்ரா,“2022ஆம் ஆண்டே ரூ.3100 வைப்புத்தொகை செலுத்தியும், சொத்துவரி ரசீது இல்லை என்பதால் மின் இணைப்பு தராமல் உள்ளனர். பணத்தையும் திருப்பி தரவில்லை” என்கிறார். 5 தலைமுறையாக வசித்து வருகிற சாரதா குறிப்பிடுகையில், “பட்டா இல்ல தான். வாடகை வீட்டிற்கு  சென்றால் வாடகை தர வேண்டும். வாடகை தரும் காசாக நினைத்து புதுவீட்டை கட்டியுள்ளோம். நீதிமன்ற வழக்கில் வெற்றி பெறுவோம்” என்று நம்பிக்கையோடு கூறினார். ராஜூ பிள்ளை தோட்டம் ராஜூ பிள்ளை தோட்டம் பகுதி 84 கிரவுண்டில் அமைந்துள்ளது. சுமார் 300 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த இடத்தை ராமச்சந்திர உடையார் உரிமை கோரினார். அவரது மகன்  வெங்கடாச்சலம் தற்போது மக்க ளோடு பேச்சுவார்த்தை நடத்தி முதற்கட்டமாக 50 பேருக்கு தலா  300 சதுர அடி நிலம் கொடுத்துள்ள தாகவும், எஞ்சிய குடும்பங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வும் கூறப்படுகிறது. வெங்கடாச்சலத்திடம் இருந்து  நிலம் பெற்றவர்கள் 3 மாடி அடுக்கு மாடி வீடுகளை கட்டியுள்ளனர். இந்த வீடுகளுக்கு சொத்துவரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், விரைந்து பட்டா கிடைக்கும் என்று நம்பிக்கையோடு உள்ளனர். 250 குடும்பங்கள் சொத்துவரி விதிப்படும் என்று எதிர்பார்ப்போடு உள்ளனர். “இங்குள்ள வீடுகள் ஒற்றை செங்கல்லால் கட்டப்பட்ட ஓட்டு வீடு கள்தான். மக்களில் பலருக்கு குடிநீர்  கழிவுநீர் இணைப்பு உள்ளது. ஆனால், வரியை வசூலிக்க மறுக்கின்ற னர்” என்று கூறும் 36 வயதான சுந்தர்,  “6 வருடத்திற்கு முன்புதான் தற்கா லிக மின் இணைப்பை பெற்றேன். வரி கட்டவும், நிலத்தை முறைப்படுத்தி வழங்கினால் அதற்கான தொகையை செலுத்தவும் தயாராக உள்ளோம். ஒரு ஆட்டோ கூட வந்து செல்ல முடியாத  அளவிற்கு தெருக்கள் குறுகளாக உள்ளன. இதை முறைப்படுத்த வேண்டும்” என்றார். “இங்குள்ள வீடுகளை நீதிமன்றம்  சென்று காப்பாற்றி வைத்துள்ளோம். ஆண்களில் பலர் குடித்துகிடக்க, பெரும்பாலான பெண்கள் வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுகிறோம். வேறு இடத்தில் குடியமர்த்தினால் வாழ்க்கையை எப்படி நடத்துவது? உஸ்மான் சாலைக்கு அருகிலேயே இருக்கி றோம். பள்ளியும் அருகிலேயே உள்ளது. இது போன்ற வசதி வேறு  எங்காவது இருக்குமா? பிறந்து வளர்ந்து மடியப்போகும் நிலையிலும் பட்டா இல்லாமல் இருக்கிறோம். அவ்வப்போது அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தாலும் பட்டா மட்டும் தர மறுக்கின்றனர்” என்று சுலோச்சனா, நாகேஸ்வரி, விசாலாட்சி, தேவி ஆகியோர் கூறினர். 133வது வட்ட சிபிஎம் கிளைச் செயலாளர் சங்கர் கூறுகையில், “முத்துரெட்டி தோட்டம், தனக் கோட்டியம்மாள் தோட்டம் குடியிருப்பு களுக்கு சொத்துவரி விதிக்க கோரி  மேயர், எம்எல்ஏ உள்ளிட்ட அதி காரிகளிடம் மனு கொடுத்து விட்டோம். 3 பேருக்கு மட்டுமே சொத்துவரி விதிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் சொத்துவரி விதிக்க வேண்டும். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ்  கேட்கப்பட் கேள்விக்கு, இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு கொடுக்க யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இருந்தாலும், மின் இணைப்பு தர மறுக்கின்றனர். குறைந்தபட்சம் தற்காலிக மின் இணைப்பையாவது தரலாமே?” என்றார். அரசு நடவடிக்கை எடுக்குமா?