செவ்வாய், ஆகஸ்ட் 11, 2020

கல்வி

img

வாய்ப்பு வாசல் : வங்கி அதிகாரிகள் பணி 

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 1163 காலிப்பணியிடங்கள் நிரப்ப IBPS தேர்வு நடைபெற உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Specialist Officers

மொத்த காலிப்பணியிடங்கள்: 1163

வயதுவரம்பு: 1.11.2019 தேதியின்படி 20 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வானது முதல்நிலை (Preliminary), முதன்மை(Main) தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும்.

முதல்நிலை தேர்வு நடைபெறும் நாள்: 28.12.2019 & 29.12.2019.

தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, கோவை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், புதுச்சேரி          

முதன்மை தேர்வு நடைபெறும் நாள்: 25.1.2020.
தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, திருநெல்வேலி, புதுச்சேரி

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. (SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு ரூ.100) இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.ibps.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 26.11.2019.

மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும். 

;