கல்வி

img

இஸ்ரோவில் தொழில் நுட்ப உதவியாளர் பணி - காலியிடங்கள்: 86

இஸ்ரோவில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்:
டெக்னீசியன் பி - 40 
பிட்டர் - 20 
எலெக்ட்ரானிக் மெக்கானிக் - 15 
பிளம்பர் - 2 
வெல்டர் - 1 
மெஷினிஸ்ட் - 1 
டிராப்ட்ஸ்மேன் பி - 12 
டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கல் - 10 
டிராப்ட்ஸ்மேன் எலெக்ட்ரிக்கல் - 2 
டெக்னிக்கல் அசிஸ்டேண்ட் - 35 
மெக்கானிக்கல் - 20 
எலெக்ட்ரானிக்ஸ் - 12 
சிவில் - 3

வயதுவரம்பு: 18 முதல் 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம் விகிதம்: டெக்னீசியன் பி மற்றும் டிராப்ட்ஸ்மேன் பணிக்கு: ரூ.21,700. டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பணிக்கு: ரூ.44,900.

கல்வித்தகுதி: டெக்னீசியன்  - B: 10/12/ITI படித்து, ஐடிஐ பிரிவில் பிட்டர் டிரேடு முடித்திருக்க வேண்டும். டிராப்ட்ஸ்மேன் –  B: 10/12/ITI படித்து, ஐடிஐ துறையில் டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கல் டிரேடு முடித்திருக்க வேண்டும். 
டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்: பொறியியல் துறையில் முதல்வகுப்பில் பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் https://apps.isac.gov.in/TAHSFC-2019/advt.jsp என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 13.9.2019 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.

;