tamilnadu

img

தமிழக கொரோனா பாதிப்பு... மாவட்ட நிலவரம்... சந்தேகத்தை உருவாக்கும் விருதுநகர் பாதிப்பு

சென்னை 
தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 1,05,004 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 25 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,227 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 4,131 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட நிலவரம்...

செங்கல்பட்டு  - 487 

திருவள்ளூர்  - 472 

காஞ்சிபுரம்  - 342 

தேனி  - 278

வேலூர்  - 179

கன்னியாகுமரி  - 175

தூத்துக்குடி  - 173

கடலூர்  - 170

சேலம்  - 153

புதுக்கோட்டை  - 150

திருச்சி  - 136

கோவை, திருவண்ணாமலை  - 112

மதுரை  - 104

மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100-க்குள் உள்ளது. குறிப்பாக தமிழகத்தின் தினசரி பாதிப்பில் சென்னையை தவிர்த்து எப்பொழுதும் டாப்பில் இருக்கும் விருதுநகர் மாவட்டத்தில் இன்று 67 பேருக்கு  தொற்று ஏற்பட்டுள்ளது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

;