tamilnadu

img

சென்னை மாநகராட்சியில் எத்தனை ஊழியர்க்கு பாதிப்பு? உண்மையை மறைக்கும் ஆணையர் - செ. கவாஸ்கர்

சென்னை, ஜுலை 5- “கொரோனா தடுப்பு பணி யில் அனைத்து நிலையிலும் ஈடுபட்டிருந்த 400 ஊழியர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 110 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர்” என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஞாயிறன்று ஒரு நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் 28 சிறுசிறு துறைகளை உள்ளடக்கி 7 பிரதான துறைகளும், 15 மண்டல அலுவலகங்களும் உள்ளன. (உதார ணத்திற்கு சுகாதாரத்துறையின் கீழ் மலேரியா துறை, தொற்று பரவல் கட்டுப்படுத்தும் துறை,  மகப்பேறு துறை, பொதுமருத்துவ துறை வருகின் றன). இவற்றில் 3ஆம் நிலை ஊழியர்களாக 5,241 பேர், 4ஆம் நிலை ஊழியர்களாக 10,524 பேர்  என 15 ஆயித்து 765 பேர் நிரந்தர ஊழியர்களாக (ஜூன் 29ந் தேதி சம்பளம் வழங்கிய கணக்குப்படி) உள்ளனர். இதுதவிர தற்காலிக, மதிப்பூதியம் (என்எம் ஆர்), தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்ட (என்யு எம்எல்), ஒப்பந்த தொழிலாளர்கள், ராம்கே,  டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் என 16 ஆயிரத்து  229 பேரும், கொரோனா தடுப்பு பணிக்காக  தொகுப்பூதியத்தில் 13 ஆயிரம் களப்பணியா ளர்களும் பணிபுரிகின்றனர்.

மயான ஊழியர்கள் பலிகடா!
 

“பாதுகாப்புடன் கொண்டு வரும் இறந்தவர்களின் உடல்களையும் கொரோனா உயிரிழப்பு  என மயானபூமி ஊழியர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள். இதனால்தான் இந்த (மரணம் அடைந்தோர்) புள்ளி விவரங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது” என்றும் தமது பேட்டியில் ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். தவறை மறைக்க தங்களை பலிகடாவாக்க ஆணையர் முயற்சிப்பதாகவும், மருத்துவமனையில் இருந்து வரும் உடல்களை அவ்வாறு பதிவு செய்வதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்றும் மயான ஊழியர்கள் கூறுகின்றனர்.

“மயானத்தில் புதைக்க அல்லது எரிக்கப்பட்டதற்கான சான்று அளிக்க மட்டுமே மயான ஊழியர்களுக்கு அதிகாரம் உள்ளது. 79 வயதுக்கு மேற்பட்ட நபர் வீட்டில் உயிரிழந்தால், மருத்துவர் சான்றிதழுடன் வந்தால், அந்த உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்துவிட்டு, இறுதி நிகழ்ச்சி செய்ததற்கான சான்றிதழ் வழங்க மட்டுமே முடியும். ஆணையர் யாரை காப்பற்ற எங்களை பலிகடாவக்க முயற்சிக்கிறார்?” என்றும்  அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஒட்டுமொத்தமாக மாநகராட்சியில் 3 மற்றும் 4ஆம்நிலை, தொழி லாளர்களாக 47,974 பேர்  பணியாற்றுகின்றனர். சென்னை மாநகராட்சி ஆணையர், நிரந்தரத் தொழிலாளர்களான 15 ஆயிரத்து 765 பேரில் 400 பேர் பாதிக்கப்பட்டு 110 பேர் குணமடைந்துள்ளதாக கூறியுள்ளார். அதன்படி இவர்களுக்குதான் அரசு அறிவித்தபடி, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைக்க வாய்ப்புள்ளது. அதேசமயம், 26 ஆயிரத்து 209 நிரந்தரமற்ற தொழிலாளர்களில்தான் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. குறிப்பாக “துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் களப்பணியாளர்களில் 700க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களை மாநகராட்சி பதிவு செய்ய மறுக்கிறது. மாநகராட்சி பதிவு செய்தால் மட்டுமே 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை கிடைக்கும். மேலும், தொற்றுபரவலை தவிர்க்க முடியும். “மாநகராட்சியின் ஒட்டுமொத்த ஊழியர்களில் 30 சதவீதம் பேருக்கு கொரோனா பரவி உள்ளது. ஆனால், மாநகராட்சி, ஊழியர்கள் அனை வரையும் முறையாக பரிசோதித்து அறிவிக்கா மல் உள்ளது.

மாறாக, மாநகராட்சி ஊழியர் களுக்கு நேரடியாக எந்த அரசு, மாநகராட்சி மருத்துவமனைகளிலும் பரிசோதனை செய்யக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது” என்று சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. குறிப்பாக, மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒரு பரப்புரையாளர் நியமிக்கப்பட்டு 4 ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர். ஆனால் இவர்கள் மாநகராட்சி ஊழியர் கணக்கில் வரமாட்டார்கள்.  திரு.வி.க.நகர் மண்டலத்தில் 15 பரப்புரையாளர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இவர்களை மாநகராட்சி பதிவு செய்யவில்லை. 3 மண்டலங்களில் தனியார் நிறுவனமான ‘ராம்கே’ துப்பரவு செய்யும் பணியை செய்கிறது. இவற்றில் 3375 தொழிலாளர்கள் பணியாற்று கின்றனர். இந்நிறுவனத்தின் மேற்பார்வையாளர் சிவக்குமார் அடையாறு மண்டல அலுவலத்தில் இருந்து பணியாற்றுகிறார்.

அவர் 5 வட்டங்களுக்கு தினசரி சென்று வருபவர். அவருக்கு கடந்த ஏப்.28ந் தேதி கொரோனா தொற்று பாதித்தது. அதனால் அந்த மண்டல அலுவலகமே ஒருவாரம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. அவரையும் தொற்று பாதிக்கப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவில்லை. இவ்வாறாக ஒவ்வொரு மண்டலத்திலும் பதிவு செய்யப்படாத ஊழியர்களை பட்டியலிட முடியும்  என்று கூறும் செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சீனிவாசுலு, “நோய்த்தொற்று வந்த பிறகுதான் மருத்துவர்கள் போராடுகிறார்கள். அதற்கும் முன்பாக களத்தின் முன்களப்பணி யாளர்களான துப்புரவு தொழிலாளர்கள், களப்பணி யாளர்கள் போராடுகின்றனர். முன்கள ஊழி யர்கள் அனைவரையும் பரிசோதிக்க மறுப்பது ஏன்? ஆணையர் ஒருபகுதி பாதிப்பை மறைத்து  தகவல் தருவது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

;