tamilnadu

img

எல்ஐசியின் வணிகத்தை தாங்கிப்பிடிப்பது முகவர்களே!

சென்னை:
எல்.ஐ.சி. பாலிசிகள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் கோட்ட அலுவலகங்கள் முன் அகில இந் திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் (லிகாய்) சார்பில் தர்ணா போராட் டம் புதனன்று (அக். 25) நடைபெற்றது.

அதன் ஒருபகுதியாக அண்ணாநகர் கோட்டம் 2 அலுவலகம் முன் லிகாய் கோட்டம் 2-ன் தலைவர் வி.நாகலிங்கம் தலைமையில் நடந்த தர்ணா போராட்டத்தை மாநில பொதுச் செயலாளர் எஸ்.ஏ.கலாம்  துவக்கி வைத்து பேசினார். சென்னை கோட்ட பொதுச் செயலாளர் டி.கே.வெங்கடேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர்கள் சி.ஆனந்தன், எஸ்.வெங்கடேசன், ஜி.என்.ஜனார்தனம், எஸ்.செல்வக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.கோட்டப் பொருளாளர் ஆர்.கிருஷ்ணன் நன்றி கூறினார்.போராட்டத்தை நிறைவு செய்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென் மண்டல துணைத் தலைவர் கே.சுவாமிநாதன் பேசுகையில், “உலகம் முழுக்க வெவ்வேறு சூழல்களில் போட்டிகள் வரும் போதெல்லாம் அரசின் ஆயுள் காப்பீட்டு சந்தை பாதிப்புக்குள்ளானது என்பதுதான் வரலாறு” என்றார்.உலகத்தின் ஒரேஒரு தேசத் தில் மட்டும்தான் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆனபிறகும் கூட, 24 தனியார் நிறு
வனங்களோடு போட்டி போட்டு 67 விழுக்காடு சந்தையை எல்.ஐ.சி நிறுவனம் தக்க வைத்துள்ளது என்பது உலக சாதனை. இந் தாண்டு ஏப்ரல் மாதல் முதல் செம்டம்பர் மாதம் வரை 6 விழுக்காடு சந்தை பங்கை மீட்டு 73 விழுக்காடு சந்தை பங்கை எட்டியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் தரகர் மூலமாகவும், வங்கி காப்பீட்டு மூலமாகவும் வணிகம் வருகிறது. ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கும் வங்கி இன்சூரன்ஸ் மூலமும், தரகர் மூலமும் வணிகம் வருகிறது. ஆனால் எல்.ஐ.சி.யின் பெரும்பாலான வணிகம் முகவர்களால்தான் நடைபெறுகிறது. முகவர்கள்தான் எல்.ஐ.சி. வணிகத்தை தாங்கிப் பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட முகவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க எல்.ஐ.சி. நிர்வாகம் முன்வர வேண்டும் என்றும் சாமிநாதன் வேண்டுகோள்விடுத்தார்.

அதேபோல் சென்னை பகுதி - 1 சார்பில் அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணாவை சிஐடியு மாநில துணைச் செயலாளர் சி.திருவேட்டை தொடங்கி வைத் தார். கோட்டத் தலைவர் எம்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் லிகாய் மாநிலப் பொருளாளர் கி.தாமோதரன், தலைமை நிலையச் செயலாளர் ஆர்.முருகேசன், கோட்ட பொதுச் செயலாளர் ஜி.பி.ஜே.லோகநாதன், பொருளாளர் கே.சுகுமார், ஏஐஐஇஏ சென்னை பகுதி - 1 பொதுச் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

;