world

img

இந்த 3 நாடுகள் 60% தடுப்பூசிகளை பெற்றுள்ளன..  உலக சுகாதார நிறுவனம் தகவல்...   

வாஷிங்டன்
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக உரை ஒன்று நிகழ்த்தினார். 

அதில் முக்கியமான அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு மறைமுகமாக 3 நாடுகளை சாடியுள்ளார். அந்த உரையில் (சுருக்கம்),  கொரோனா பெருந்தொற்றை தடுக்க உலகம் முழுவதும் இதுவரை 200 கோடி தடுப்பூசிகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.  இதில் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய 3 நாடுகளிடம் மட்டும் 60% தடுப்பூசிகள் சென்றடைந்துள்ளன. தனி நபர் வருமானம் குறைவாக உள்ள நாடுகள் அதாவது ஏழ்மையான நாடுகளில் சுமார் 0.5% தடுப்பூசிகளே சென்றடைந்துள்ளன. இன்னும் பல நாடுகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், வயதானர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படவில்லை. உலகம் முழுவதும் இதுவரை 10 சதவீத மக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால் நாம் விரைவாக தடுப்பூசி விநியோகம் செய்வதை அதிகரிக்க வேண்டும்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் கோவாக்ஸ் திட்டம் தடுப்பூசியை உலக நாடுகளிடையே பகிர்ந்தளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இந்த திட்டம் மூலம் சுமார் 127 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என் ஆவர் கூறியுள்ளார். 

;