tamilnadu

img

பிரேசிலில் தொடரும் சோகம்...  ஒரே நாளில் 40 ஆயிரம் கொரோனா பாதிப்பு... 1,100 பேர் பலி...

ரியோ  
தென் அமெரிக்க கண்டத்தின் மிகப்பெரிய நாடான பிரேசிலில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரதத்தில் நினைக்க முடியாத அளவிற்கு 40,995 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 11 லட்சத்து 92 ஆயிரத்து 474 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 103 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 53 ஆயிரத்து 874 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா ஒருபக்கம் வேகமாக பரவினாலும் மருத்துவ சிகிச்சையில் பிரேசில் அரசு கவனமாக செயல்பட்டு மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்து வருகிறது. இதுவரை பிரேசிலில் 6 லட்சத்து 49 ஆயிரத்து 908 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.       

ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு மற்றும் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தாலும், தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் தற்போது பிரேசில் தான் டாப் ஆர்டரில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பிரேசில் விரைவில் அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி முதலிடத்துக்கு முன்னேறும் அபாயம் ஏற்படும்.  கொரோனாவுக்கான பாதிப்பு அட்டவணையில் பிரேசில் தற்போது 2-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

;