tamilnadu

img

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி கால் சென்டர்களின் நிலை என்னவாகும்?

பெங்களூரு, மே 2- செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின்  முன்னேற்றங்கள் இந்தியா வின் கால் சென்டர் துறையை ஒரு வரு டத்திற்குள் அழித்துவிடும் என்று டிசிஎஸ் தலைமை நிர்வாக இயக்குநர் கிரித்திவாசன் கூறுகிறார். இது தொடர்பாக அவர் பைனான்சியல் டைம்ஸ்க்கு அளித்த பேட்டி:- செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் வேலை இழப்புகள் எதுவும் இது வரை ஏற்படவில்லை என்றாலும், பன்னாட்டு வாடிக்கையாளர்களிடையே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பரவலாக ஏற்றுக்கொள்வது என்ற முடிவு கால் சென்டர்  செயல்பாடுகளில் “புரட்சியை” ஏற்படுத்தும். வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை களை பகுப்பாய்வு செய்வதற்கும், கால்  சென்டர் முகவர்களால் பாரம்பரியமாக மேற் கொள்ளப்படும் பணிகளைச் செய்வதற்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்து டன் கூடிய மென்பொருட்கள் வடிவமைக் கப்படும்.  

ஒரு வருடத்தில் அதாவது விரை வில் ஆசியா முழுவதும் கால் சென்டர்களுக்கான  தேவை மிகவும் குறைந்து விடும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட் பத்தின் தாக்கம் கால் சென்டர் முகவர்கள் மற்றும் மென்பொருள் உருவாக்கும் பணி யில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், உலகளவில் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையே  ஒரு அமைதியின்மையை ஏற்படுத்தி யுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்  வேலைவாய்ப்பில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் பற்றி கேட்டபோது, தொழில்நுட்பத் திறமையாளர்களுக்கான தேவை அதிகரிக்கும், குறையாது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியாவில் தொழிலாளர் பயிற்சி அவசியம் என்றார். இந்தியாவின் தொழில்நுட்பப் பிரிவில் முக்கியப் பங்கு வகிக்கும் டிசிஎஸ் நிறு வனத்தில் 6,00,000-க்கும் அதிகமான பணி யாளர்கள் உள்ளனர். இதன் ஆண்டு வரு மானம் 30 பில்லியன் டாலர் ஆகும். மேலும் இந்நிறுவனம் 900 மில்லியன் டாலர் மதிப்பி லான செயற்கை நுண்ணறிவுத் திட்டங் களைக் கொண்டுள்ளது. நாஸ்காமின் கூற்றுப்படி, அலுவலகச் சேவைகளுக்குப் புகழ்பெற்ற இந்தியா விலும்  தொழில்நுட்பத்துறையிலும் இதன் தாக்கம் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பட்டம் பெற்று கல்லூரிகளிலிருந்து வெளி யேறிச் செல்லும் 1.5 மில்லியன் பொறி யியல் மாணவர்களில் 20 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தொழில்துறையில் வேலை தேடுகிறார்கள் என்று நாஸ்காம் கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

;