tamilnadu

img

கொரோனாவால் நிறுத்தப்பட்ட வீட்டு வேலைப் பணியாளர்கள்

மதுரை:
கொரோனா ஊரடங்கால் வீட்டுவேலைப் பணியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.பிரதமர் மோடி, ஊரடங்கை அமல்படுத்துவதற்கு  சில நாட்களுக்கு முன்பு, வேலைக்கு வர முடியாத வீட்டுப் பணியாளர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டாம் என்று குடிமக்களை ‘கேட்டுக்கொண்டார்’. ஆனால் அது நடைமுறையில் சாத்தியமாகவில்லை.

2011 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 90 மில்லியன் வரை இருக்கலாம்  சில தகவல்கள் கூறுகின்றன.வீட்டுத் தொழிலாளர் துறை (டி.டபிள்யூ.எஸ்.எஸ்.சி) தில்லி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், அசாம், மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட் மற்றும் தமிழ்நாடு ஆகிய எட்டு மாநிலங்களில் நடத்திய ஆய்வில், ஊரடங்கு காலத்தில் சுமார் 85 சதவீத தொழிலாளர்கள் சம்பளம்பெறவில்லை என்பது தெரியவந்துள் ளது. 
சுமார் 23.5 சதவீதத் தொழிலாளர் கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர், அவர்களில் 38 சதவீதத்தினர் உணவு தேவையை பூர்த்திசெய்வதில் சிக்கல்களை சந்தித்துவருகின்றனர். அவர்களில் குறைந்தது 30 சதவீதம் பேர்  வேலையின்றி தவிக்கும் இந்தக் காலத்தில் தப்பிக்க தங்களிடம் பணம் இல்லை என்று தெரிவிக்கின்றனர்.சென்னையில் மட்டும் சுமார்2,500 வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்கள் ஊதியம் பெறவில்லை. நகர் முழுவதுமிருந்து ஊதியம் பெறாத வீட்டுத் தொழிலாளர்களின் முழு பட்டியலையும் நாங்கள் இன்னும் பெறவில்லை. பட்டியல் கிடைத்தால் இந்த எண்ணிக்கை லட்சத்தில் இருக்கும் என்கிறார் தேசிய வீட்டுத் தொழிலாளர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் வளர்மதி.முறைசாரா தொழிலாளர் சம்மேளனத்தின் ஆலோசகர் ஆர்.கீதா  கூறுகையில், “கொரோனா காலத்தில் வாடகை கேட்கக்கூடாது என்ற அரசின் ஆலோசனை பலனளிக்கவில்லை. அரசு ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம்வழங்கவேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம். ரேஷன் பொருட் களை மட்டும் வழங்குவது தொழிலாளர்களுக்கு உதவாது, ஏனெனில் அவர்கள் காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கவேண்டும். அரசு ரூ.1000 நிவாரணம் வழங்கியது. அது இன்னும் பலருக்குக் கிடைக்கவில்லை” என்றார்.

வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்களின் நிலையை உறுதிப்படுத்துவதாக உள்ளது சென்னை ஊரப் பாக்கத்தைச் சேர்ந்த செல்வியின் தகவல்.“மூன்று வீடுகளில் வேலை செய்துமாதத்திற்கு ரூ. 7ஆயிரம் முதல் ரூ.8. ஆயிரம் வரை சம்பாதித்தேன். எனக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.சென்னை நகரிலிருந்து வேலைக்காக சுமார் 25 கி.மீ.தூரம்பயணம் செய்து சென்னை நகருக்கு வருவேன். ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால், என்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு குறைந்தபட்சம் பணம் தருமாறு வீட்டு உரிமையாளர்களிடம் கேட்டேன். அவர்கள் மறுத்துவிட்டனர்” என்றார் வேதனையுடன்.

;