tamilnadu

கொரோனா ஊரடங்கால் தைக்காலில் பிரம்பு, கோரைப்பாய் தொழில் முடக்கம் நிவாரணம் வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை

சீர்காழி, ஜூலை 6- கொரோனா ஊரடங்கு காரணமாக கொள்ளிடம் தைக்காலில் பிரம்பு மற்றும் கோரைப்பாய் தொழில் முடக்கத்தால் 5  ஆயிரம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டு ள்ளது.  நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சித ம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய  நெடுஞ்சாலையில் தைக்கால் கிராமம் உள்ளது. இங்கு கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பிரம்பால் செய்யப்படும் மேசை, நாற்காலி, கட்டில், ஊஞ்சல் போன்ற பல வகையான பொருட்களும் கலை நயமிக்க அழகு பொருட்களும் செய்யப்பட்டு வெளி யூர் மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்காலிக கோரைப் பாய் நெச வுத்தொழிலும் சிறப்பாக நடைபெற்று வரு கிறது. இதே பகுதியைச் சேர்ந்த துளசேந்தி ரபுரம், மேலவல்லம், கீழவல்லம், மாங்க ணாம்பட்டு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியிலும்  பிரம்பு மற்றும் கோரைப்பாய் நெசவு செய்யும்  தொழில் நடைபெற்று வருகிறது.  இப்பகுதியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகள் உள்ளன. இத்தொழிலில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இக்கு டும்பங்கள் இத்தொழிலை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றன.

ஏற்கனவே பண  மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி ஆகிய நடவடிக்கை களாலும், மூலப்பொருட்களின் விலை உய ர்வாலும் பிரம்பு மற்றும் பாய் தயார் செய்யும் தொழில் நலிவடைய தொட ங்கிய நிலையில் மீண்டும் இத்தொழிலுக்கு முடக்கம் ஏற்பட்டுள்ளது.  கொரோனா ஊர டங்கு உத்தரவால் எந்த வருவாயுமின்றி தொழி லாளர்கள் வறுமையில் வாடி,  வாழ்வாதா ரத்தை இழந்து அவதிப்படுகின்றனர். இதுகுறித்து துளசேந்திரபுரம் தைக்கால் தொழிலாளர் நலக் கூட்டமைப்பைச் சேர்ந்த  பக்கீர்முகம்மது, இபுராம்சா, வெங்கட்ராஜ் ஆகியோர் கூறுகையில், ஊரடங்கு உத்தர வால் பாய் மற்றும் பிரம்பு தொழிலில் ஈடு பட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் முற்றிலும் வாழ்வதாரத்தை இழந்து வீடுகளில் முடங்கியுள்ளனர். அமை ப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்குவது போல பிரம்பு மற்றும் பாய் தொழிலில் ஈடு பட்டுள்ள தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும். வங்கிக் கடன் உள்ளி ட்ட குறுகிய கால கடன்களை செலுத்தும்  அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். தொழி லாளர்கள் பெற்றுள்ள கடன் தொகையில் மூன்று மாத தவணைத்தொகையை தள்ளு படி செய்ய வேண்டும் என்றனர்.

;