tamilnadu

img

தகுதிநீக்க எம்எல்ஏவின் சொத்து 18 மாதத்தில் ரூ.185 கோடி அதிகரிப்பு!

பெங்களூரு:
கர்நாடக தகுதி நீக்க எம்எல்ஏநாகராஜின் சொத்து மதிப்பு, 18 மாதங்களில் மட்டும் ரூ. 185கோடி அளவிற்கு அதிகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் நாகராஜ். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், சிலமாதங்களுக்கு முன்பு பாஜக-வுக்கு ஆதரவாக மாறி, எம்எல்ஏபதவியை ராஜினாமா செய்தார்.அதனாலேயே தகுதி நீக்கத் திற்கும் உள்ளானார். சில நாட்களுக்கு முன்பு பாஜக-வில் இணைந்த 16 தகுதி நீக்க எம்எல்ஏக்களில் நாகராஜூம் முக்கியமானவர். தற்போது ஹோஸ்கோதே தொகுதி பாஜக வேட்பாளராகஅறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நாகராஜ் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், அவரது சொத்து மதிப்பு, கடந்த 18 மாதத்தில் மட்டும் ரூ. 185 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்து இருப்பது பலரின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. குறிப்பாக, கர்நாடகத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெற்ற ஆகஸ்ட் மாத காலக்கட்டத்தில் மட்டும் 53 வங்கிக் கணக்குகளில் ரூ. 48 கோடி ரூபாய் டெபாசிட் ஆகியுள்ளது. சொத்து மதிப்பில் நான்கில் ஒரு பங்கு ஆகஸ்டில் மட்டும் அதிகரித்துள்ளது.2018 மற்றும் 2019 ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்கள் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்தால், அசையா சொத்துக்களின் மதிப்புமட்டும் 104 கோடியே 53 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. அவரது மனைவியின் சொத்து மதிப்பு 44 கோடியே 95 லட்சம் அதிகரித்துள்ளது.நாகராஜ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் மொத்தம் ஆயிரத்து 201 கோடியே 50 லட்சம் சொத்து இருப்பதாகவும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;