tamilnadu

img

மேலும் 5 இந்திய ஹாக்கி வீரர்களுக்கு கொரோனா தொற்று... 

பெங்களூரு
கொரோனா தொற்றால் தள்ளிவைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தயாராகும் வகையில், இந்திய ஹாக்கி வீரர்கள் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பயிற்சி பெற்று வருகின்றனர். முதல் கட்ட பயிற்சி முகாம் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், மீண்டும் அடுத்த வாரம் 2-ஆம் கட்ட பயிற்சி தொடங்கவுள்ளது.

இந்நிலையில், இந்திய ஹாக்கி அணியின் மூத்த வீரரும், கேப்டனுமான மன்பிரீத் சிங்-கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. இதன்மூலம் அவர் பெங்களுருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்திய ஹாக்கி சம்மேளனம் அதிர்ச்சியில் உறைந்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் மற்ற இந்திய ஹாக்கி வீரர்களான சுரேந்தர்குமார், ஜஸ்கரன்சிங், வருண்குமார், கிரிஷன் பஹதுர் பதாக், மன்தீப் சிங் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

ஒரே நேரத்தில் 6 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் இந்திய ஹாக்கி அணிகளின் ஒலிம்பிக் பயிற்சி ரத்தாகும் நிலையில் உள்ளது. இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் ஹாக்கி அணிகளுக்கான பயிற்சி முகாம் வருகிற 19-ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

;