tamilnadu

img

இந்தியாவில் தொழில் துவங்கத்தான் 45 ஆவணங்கள் வேண்டும்... 19 ஆவணங்கள் இருந்தாலே... துப்பாக்கி வாங்கி விடலாம்

புதுதில்லி:
தொழில் துவங்குவதற்கு உகந்த நாடுகள் பட்டியலில், இந்தியா ஏன், பின்தங்கி இருக்கிறது என்பது குறித்து, தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் விளக்கியுள்ளார்.2019-20 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்த தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், இதுதொடர்பாக மேலும் கூறியிருப்பதாவது:

பொருளாதாரத்தில் வளங் களை உருவாக்குவதில் முக்கியஅம்சங்களில் ஒன்று பொருளாதாரச் சுதந்திரம். ஆனால், இங்கு எளிதாக தொழில் தொடங்கும் சூழல்,உண்மையில் சிக்கலாக இருக்கிறது. இருப்பினும் எளிதாகத் தொடங்கும் விஷயத்தில் இந்தியா பல்வேறு விஷயங்களில் சமீபகாலத் தில் முன்னேறியிருக்கிறது. ஆனால், பல பிரிவுகளில் இன்னும் பின் தங்கித் தான் இருக்கிறது.தில்லியில் நீங்கள் ஒரு துப்பாக்கி உரிமம் வாங்க வேண்டுமென்றால் 19 ஆவணங்கள் அளித்தால் வாங்கி விடலாம். ஆனால், ஒரு ஹோட்டல் தொடங்குவதற்கு 45 ஆவணங்கள் தேவைப்படுகின்றன. 

இந்தியாவில் புதிய நிறுவனத்தைத் தொடங்க 18 நாட்கள்சராசரியாகத் தேவைப்படுகின் றன. 10 விதமான கட்டங்களைத் தாண்ட வேண்டும். ஆனால் நியூசிலாந்தில் தொழில் தொடங்க அரை நாள் போதுமானது. ஒரேயொரு விண்ணப்பம் போதும். மறுநாள் நீங்கள் தொழில் நிறுவனம் தொடங்கிவிடலாம்.அதனால்தான், பொருளாதார ஆய்வறிக்கையில், வழங்கப்பட்ட முக்கிய ஆலோசனையில், தொழில் தொடங்க ஏதுவான சூழல் உள்ள நாடுகளில் இந்தியாமுன்னேற அதிகமான முக்கியத்துவம் தேவை என வலியுறுத்தப்பட் டுள்ளது.இந்தியாவுடன் ஒப்பிடும் போது, சீனாவில் 1.4 நாள், இந்தோனேசியாவில் 1.2 நாள், பிரேசிலில் 2.2 நாள் காத்திருந்தாலே தொழில்தொடங்க அனுமதி கிடைத்துவிடும். தொழில் தொடங்க ஏதுவான சூழல் உள்ள 190 நாடுகளில்இந்தியா தற்போது 163-வது இடத்தில் பின்தங்கி இருக்கிறது. இந்தியாவைக் காட்டிலும் மோசமாக இருப்பவை, ஆப்கானிஸ் தான், மொசாம்பிக், ஜிம்பாப்வே ஆகிய நாடுகள்தான்.ஒரு ஹோட்டல் தொடங்க சிங்கப்பூரில் 4 ஆவணங்கள் போதுமானது. இந்தியாவிலோ ஏராளமான கட்டாய ஆவணங்கள் தேவை. தில்லியில் 26 ஆவணங்களும், பெங்களூருவில் 36 ஆவணங்களும், மும்பையில் 22 ஆவணங்களும் தேவைப் படுகின்றன.”இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

;