tamilnadu

img

‘முத்ரா’ திட்டத்தில் பெரிதாக முன்னேற்றம் எதுவும் இல்லை

புதுதில்லி:
மோடி அரசால் பெரிய அளவிற்கு விளம்பரப்படுத்தப்பட்ட திட்டங்களில், பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டமும் (PMMY) ஒன்றாகும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக, 2015-16 நிதியாண்டில் ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 10 லட்சம் வரை கடன் பெறலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.ஆனால், இத்திட்டம் துவ ங்கப்பட்டு, நான்காண்டுகளை நெருங்கும் நிலையில், ‘முத்ரா’ திட்ட த்தால் புதிய தொழில்கள் உருவாக்கம்,வளர்ச்சி, வேலைவாய்ப்புத் துறைகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

முத்ரா திட்டத்தின் சிசு, கிஷோர், தருண் வகைப்பாடுகளின் கீழ் மொத்தம் 5 லட்சத்து 71 ஆயிரம் கோடிகள் கடனாக வழங்கப்பட்டுள்ளன. சராசரியாக ஒரு நபருக்கு ரூ. 46 ஆயிரத்து 453 ரூபாய் விகிதம் 12 கோடியே 27 வங்கிக் கணக்குகளின் வழியாக இந்தக் கடன் சென்றடைந்துள்ளது.முத்ரா திட்டத்தின் கீழ் கடன்பெற்ற பயனாளிகளில் 5 பேரில் ஒருவர் மட்டுமே புதிதாக தொழில் தொடங்கியிருக்கிறார். ஏனைய நால்வரும் ஏற்கெனவே இருக்கும் தொழிலை மேம்படுத்துகிறோம் என்றே கடன் பெற்றுள்ளனர். புதிய பணிவாய்ப்புக்களை உருவாக்கியது என்று பார்த்தால், ரூ. 50 ஆயிரம் வரை மட்டுமே பெறப்பட்ட சிசு (SHISHU) வகைக் கடன்கள் மட்டுமே 66 சதவிகிதம் வேலைவாய்ப்புக்களை அளித்துள்ளன. மற்றபடி, ரூ. 5 லட்சம் வரை பெறப்பட்ட கிஷோர் (முஐளுழடீசு) வகைக் கடன்கள் 18.85 சதவிகிதம், ரூ. 10 லட்சம் வரை பெறப்பட்ட தருண்வகைக் கடன்கள் 15.51 சதவிகிதம் என்ற அளவிலேயே பங்காற்றியுள்ளன. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

;