tamilnadu

img

மகாத்மா கொலையில் சாவர்க்கரை நிரபராதி என்று நீதிமன்றம் கூறவில்லை!

புதுதில்லி:
மகாத்மா காந்தி படுகொலையில், வி.டி. சாவர்க்கர் - குற்றமற்றவர் என்று ஒருபோதும் நீதிமன்றம் கூறவில்லை என காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி கூறியுள்ளார்.வி.டி. சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த நிலையில், அதற்கு உடனடியாக கடும் எதிர்ப்பு எழுந்தது. மகாத்மா காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு, நாட்டின் விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்து, கடைசிவரை பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசம் காட்டிய சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது கொடுப்பதா? என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

ஆனால், காந்தி கொலையில் வி.டி. சாவர்க்கர் நிரபராதி என்று நீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டதாக பாஜகவினர் பதிலளித்து வந்தனர்.இந்நிலையில்தான், காந்தி கொலை வழக்கில் வி.டி. சாவர்க்கர்குற்றமற்றவர் என்று நீதிமன்றம் ஒருபோதும் தீர்ப்பில் கூறவில்லை என்றுமகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரனும், பத்திரிகையாளருமான துஷார்காந்தி கூறியுள்ளார்.இதுதொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில்பேசியிருக்கும் துஷார் காந்தி,“காந்தி கொலையில், சாவர்க்கருக்கு எதிராக போதுமான ஆதாரம் இல்லை என்பதாலேயே அவர் விடுதலை செய்யப்பட்டார்; நிரபராதி என்பதால் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.“காந்தியின் கொலையில் உண்மையில் என்ன நடந்தது? என் பதை இந்த நேரத்தில் நாம் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.காந்தி கொலை வழக்கில், சாவர்க்கருக்கு எதிராக நாங்கள் அளித்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை.அதனாலேயே அவர் விடுவிக்கப்பட் டார். சாவர்க்கரை நிரபராதி என்றுஒருபோதும் நீதிமன்றம் கூறவில்லை.ஆனால், அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது தர சங்-பரிவாரங்கள் முயல் கின்றன” என்று துஷார் காந்தி கூறியுள்ளார்.தேசத் தந்தையான மகாத்மா காந்தி, 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி பிர்லா பவனில் நடைபெறவிருந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது, நாதுராம் கோட்சே-வால் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 8 பேரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. அவர்களில் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகிய இருவருக்கும் 1949-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால், 7-ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தவரும், காந்திகொலைக்கு மூளையாக செயல்பட்டதாக, குற்றம் சாட்டப்பட்டவருமான வி.டி. சாவர்க்கரை நீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வே தற்போது மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது.

;