tamilnadu

img

நாடாளுமன்ற அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கிறது...

புதுதில்லி:
நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை மத்திய அரசு பறிப்பது சரியல்ல என்று காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.நாடாளுமன்ற மக்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்தை துவக்கி வைத்துப் பேசியஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “நிதி மசோதாவில் உள்ள பட்ஜெட் தொடர்பான 18 சட்டங்கள், வரியுடன் தொடர்பில்லாதவை” என்று விமர்சித்துள்ளார்.“இவ்வாறு தனது அதிகார வரம்புக்குள் வராதசட்டங்களில் திருத்தம் செய்யும் மத்திய அரசின் நிதிமசோதாவை எதிர்க்கிறோம்” என்றும், “நாடாளுமன் றத்தின் அதிகாரங்களை மத்திய அரசு பறிப்பது சரியல்ல”என்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியிருக்கிறார்.“இந்திய பொருளாதாரம் ஒழுங்கின்றி உள்ளது; வேலைவாய்ப்பு விகிதம் குறைவாக உள்ளது; நீங்கள் நல்ல வட்டத்துக்குள் நுழைகிறீர்களா? கெட்ட வட்டத்துக்குள் நுழைகிறீர்களா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்” என்றும் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

;