tamilnadu

img

மோடியின் வெளிநாட்டுப் பயணம் : தனி விமானத்திற்கு மட்டும் ரூ. 255 கோடி செலவு!

புதுதில்லி:
பிரதமர் நரேந்திர மோடி கடந்த மூன்று ஆண்டுகளில் தனி விமானத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணச் செலவு விவரங்கள் குறித்து நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.அதற்கு, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் பதில் அளித்துள்ளார். அதில், 2016 -2017 காலகட்டத்தில் மோடி தனி விமானத்தில் வெளிநாடுகள் சென்றதற்கு 76 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவிடப்கட்டுள்ளது; இதேபோல 2017 -2018ஆம் ஆண்டில் 99 கோடியே 32 லட்சம் ரூபாய், 2018 -2019ஆம் ஆண்டில் 86 கோடியே 91 லட்சம் ரூபாய் என கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 255 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது என்று முரளிதரன் தெரிவித்துள்ளார். மேலும், 2019-20 நிதியாண்டிற்கான கட்டண விவரம் இன்னும் பெறப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.உள்நாட்டு பயணங்கள் அரசு முறை பயணமாக அமைவதால் அதற்கு கட்டணங்கள் செலுத்தப்படுவது இல்லை. எனவே உள்நாட்டு பயணங்கள் அனைத்தும் பிரதமருக்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

;