tamilnadu

img

இந்தியாவின் ஜிடிபி 5.5 சதவிகிதமாகவே இருக்கும்

புதுதில்லி:
2019-20 நிதியாண்டில் இந்தியா 5.5 சதவிகித வளர்ச்சியை மட்டுமே கொண்டிருக்கும் என்று சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான ‘பிட்ச்’ தெரிவித்துள்ளது.இதற்கு முன்னர் ஜூன் மாதம் பிட்ச்நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில் இந்தியா 6.6 சதவிகித வளர்ச்சியைக்கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதிலிருந்து தற்போது 1.1 சதவிகிதத்தை ‘பிட்ச்’ நிறுவனம் குறைத்துள்ளது.இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை(ஜிடிபி) தரமதிப்பீடு செய்யும் நிறுவனங்கள், ஒவ்வொரு காலாண்டிலும், தங்களின் மதிப்பீட்டைக் குறைத்துக் கொண்டே போகின்றன. ரிசர்வ் வங்கி,ஐஎம்எப், மூடிஸ், ஏடிபி உள்ளிட்ட நிறுவனங்கள் அண்மையில் இந்தியாவின் ஜிடிபி மதிப்பை வெகுவாக குறைத்தன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை, கடந்த ஏப்ரல் மாதத்தில், 7.5 சதவிகிதமாக உலக வங்கி (World Bank) கணித்திருந்தது. அக்டோபரில் அதில் 1.5 சதவிகிதத்தை குறைத்தது. இந்திய ரிசர்வ் வங்கியும், (Reserve Bank Of India) ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பை 6.6 சதவிகிதத்தில் இருந்து, 6.1 சதவிகிதமாக குறைத்தது.
‘மூடிஸ்’ (Moody’s) நிறுவனம், 2019-20நிதியாண்டின் துவக்கத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவின் ஜிடிபி 6.8 சதவிகிதமாக இருக்கும் என்று கூறியது. பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் ஜிடிபிமதிப்பை 6.2 சதவிகிதம் என்று 0.6 புள்ளிகளைக் குறைத்தது. அக்டோபரில் மேலும்0.4 புள்ளிகள் குறைத்து, தற்போது 5.8 சதவிகிதத்தில் நிறுத்தியுள்ளது.இதேபோல ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) ஜூலை மாதம் வெளியிட்ட அறிக்கையில், 2019-20 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும் என்று கூறியிருந்தது. ஆனால், அக்டோபரில் வெளியிட்ட திருத்தப்பட்ட மதிப்பீட்டில், 6.5 சதவிகிதம் என்று ஆசியவங்கியும் ஜிடிபி கணிப்பைக் குறைத்தது.

இந்நிலையில்தான் பிட்ச் (Fitch Ratings) நிறுவனம் ஜிடிபி கணிப்பை 5.5 சதவிகிதத்திற்கு குறைத்துள்ளது. இதேநிறுவனம் 2019 நிதியாண்டின் துவக்கத் தில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.7 சதவிகிதமாக இருக்கும் என்று கூறியது. அதையே பின்னர் 6.1 சதவிகிதமாக மாற்றியது. தற்போது அதிலிருந்தும் 1.1 சதவிகிதத்தை குறைத்துக் கொண்டுள்ளது.எந்த வகையில் பார்த்தாலும், சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்களின் அனைத்து அறிக்கைகளும், 2019-20இல்இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.5 அல்லது6 சதவிகிதத்தை தாண்ட வாய்ப்பில்லை என்பதையே தெரிவிக்கின்றன.2019-20 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி5 சதவிகிதமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

;