tamilnadu

img

கல்வி, சுகாதாரத்திற்கான செலவு 4 சதவிகிதத்தைத் தாண்டவில்லை ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமான நிலையில் இந்தியா!

புதுதில்லி, ஏப். 22 -கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தி, நாட்டை முன்னேற்றி இருப்பதாக பாஜக கூறி வரு கிறது. குறிப்பாக, பணமதிப்பு நீக்கம்,ஜிஎஸ்டி-யால் நாட்டின் வரு வாய் பலமடங்கு அதிகரித்து இருப்பதாகவும், பொருளாதாரம் வளர்ந்திருப்பதாகவும் கூறுகிறது. ஆனால் இவ்வாறு அதிகரித்த வருவாய் எங்கே? என்ற கேள்வி, மோடி அரசை சுற்றிச் சுற்றி வருகிறது.அதிகரித்த வருவாயைக் கொண்டு, நாட்டு மக்களின் கல்வி,சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டை கூடவா? மோடி அரசால் உயர்த்த முடியவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்ல, கல்வி, சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் ஆப்பிரிக்க நாடு களைக் காட்டிலும் பின்தங்கிய மோசமான நிலையிலேயே மோடி அரசு நாட்டை வைத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள் ளது.இந்திய நாட்டின் கல்வி, சுகாதாரத்திற்கு மத்திய - மாநில அரசுகள் இரண்டும் சேர்ந்து செலவிடக்கூடிய தொகையே, உள் நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி)4 சதவிகிதத்தைத் தாண்ட வில்லை. ஆனால், இவ்விரண்டிற் கும் ஆப்பிரிக்க நாடுகள், இந்தியா வைவிட அதிகமாக - சராசரியாக 7 சதவிகிதம் அளவிற்கு செலவு செய்கின்றன. கிழக்காசிய நாடுகள் 7.2 சதவிகிதமும், லத்தீன்-அமெரிக்க நாடுகள் 8.5 சதவிகி தமும், முன்னேறிய நாடுகள் 13.3சதவிகிதமும் செலவு செய்கின்றன.மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் (ழரஅயn னுநஎநடடியீஅநவே ஐனேநஒ) 186 நாடுகள் தர வரிசைப் படுத்தப்பட்டு உள்ளன. இதில் இந்தியா 130-ஆவது இடத்தையே வகிக்கிறது. இதிலும் பெரிய முன்னேற்றம் இல்லை.இதுதொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு எல்லாம், ‘போதிய நிதி ஆதாரங்கள் இல்லாததால் கல்வி, ஆரோக்கியம், ஊட்டச்சத்து போன்றவற்றிற்கு தாராள மாகச் செலவு செய்வதில் சிக்கல்இருக்கிறது’ மோடி அரசு கூறு கிறது. 2017-18 பொருளாதார ஆய்வறிக்கையில் கூட இவ்வாறு தான் மோடி அரசு போலிக் கண்ணீர் விட்டுள்ளது. அப்படி யானால், பணமதிப்பு நீக்க நடவடிக்கையாலும், ஜிஎஸ்டி-யாலும் பன்மடங்கு பெருகியதாகச் சொல்லப்படும் அரசின் வரி வருமானம் எங்கே? இதற்கு மோடி அரசு பதிலளிக்க வேண்டுமா, இல்லையா? என்று மனிதவள ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

;