tamilnadu

img

வெற்றிகரமாக புவியின் வட்ட பாதையை சென்றடைந்தது சந்திராயன் 2 விண்கலம்

சந்திராயன் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.  இதையடுத்து விண்கலம் புவி வட்டப்பாதையை சென்றடைந்தது
கடந்த 2008-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 1 விண்கலமானது, நிலவில் தண்ணீர் இருப்பதை முதன்முதலாக உறுதிசெய்தது. அதையடுத்து கடந்த  2009-ம் ஆண்டு சந்திரயான் 2 திட்டத்திற்கு மத்திய அரசு  ஒப்புதல் வழங்கியது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் பணியானது நடைபெற்று வருகிறது. சந்திரயான் 2 பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, ஜூலை 15-ம் தேதி ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் கவுண்டவுனும் தொடங்கியது. கவுண்டன் முடிய 56 நிமிடங்கள் இருந்த நிலையில் ராக்கெட்டில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக கவுண்டவுன் நிறுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முடிவில் சந்திரயான் விண்கலத்தை விண்ணில் ஏவும் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது.
இதைத் தொடர்ந்து அனைத்து விதமான ஆய்வுகளும் முடுக்கப்பட்ட 22 -ம் தேதி(இன்று) மதியம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது. 
இதையடுத்து ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என்ற 3 நிலைகள் கொண்ட சந்திராயன் 2 விண்கலம் இன்று மதியம் சரியாக 2.43 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.  ஏவப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் வெற்றிகரமாக பூமியின் வட்ட பாதையை 16 நிமிடங்களில் சென்றடைந்தது.  இதைத்தொடர்ந்து இது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமையான தருணம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். 

 

;