tamilnadu

img

சிறப்பாக செயல்படும் சந்திரயான் 2 ஆர்பிட்டர்

பெங்களுரூ:
சந்திரயான்- 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் சிறப்பாக செயல்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது. சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர்தரையிறங்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அதனுடனான தொடர்பை இழந்தது.பின்னர் சந்திரயான்-2 ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர், நிலவின் தரைப்பகுதியில் ஒருபக்கம் சாய்ந்த நிலையில் விழுந்துஇருப்பது கண்டறியப் பட்டது. இந்நிலையில்  இஸ்ரோ தலைவர் சிவன் வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,  சந்திரயான் -2 ஆர்பிட்டர் நன்றாக வேலைசெய்து வருகிறது. அதனுடைய அனைத்து இயக்கங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் லேண்டரில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை.  இதுகுறித்து ஆய்வு செய்ய தேசிய அளவிலான குழு ஒன்று  அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்த பின், நாங்கள் எதிர்கால திட்டம் குறித்து பணியாற்றுவோம். இதற்கு ஒப்புதல்கள் மற்றும் பிறநடைமுறைகள் தேவைப்படுகின்றன. அதை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.

;