tamilnadu

புதுவையில் மதுக்கடைகளை திறக்கும் முடிவை கைவிட வேண்டும் சிபிஎம் வலியுறுத்தல்

புதுச்சேரி, மே 9- ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் திறக்கும் முடிவை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் புதுச்சேரி பிர தேச செயலாளர் ஆர்.ராஜாங்கம்  வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாத்திட முன் தயாரிப்பின்றி திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. நோய் தொற்று  பரவாமல் இருக்க மே 4 முதல் மேலும் பதி னேழு நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் சில நிபந்தனைகளு டன் தொழிற்சாலைகள், விவசாயம், வணிகம் மாநில அரசால்  அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிதி ஆதாரங்களை மையப்படுத்தியுள்ள மத்திய அரசு, இந்த பேரி டர் காலத்திலும் மாநிலங்களுக்கு உரிய நிதி  உதவியும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவ திலும் இறுக்கமான மனநிலையை கொண்டி ருப்பது பொருத்தமற்றது.

இதனால் புதுச்சேரி மாநில அரசு அசாதார ணமான சூழ்நிலையில் அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம், பெட்ரோல், டீசல் மீது  மதிப்பு கூட்டு வரி உயர்த்துவது என மாநில  மக்கள் மீது நிதி சுமையை ஏற்றிட நிர்ப்பந்திக்  கப்படுகிறது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்  கொரோனாதொற்று கட்டுப்  பாட்டில் உள்ளது.  இந்நிலையில் மதுக்கடைகளை திறக்க வும், அதன் மூலம் வருமானத்தை ஈடுகட்டவும்  மாநில அரசு முயற்சிப்பது கவலை அளிப்பதா கும். மத்திய அரசு நிதி உதவி வழங்கி, மாநி லங்களின் நிதி சுமையிலிருந்து மீட்க மன மில்லாததால், மறுபுறத்தில் நிதி நெருக் கடியை சமாளிக்க மாநில அரசுகள் இது போன்ற முடிவுகளுக்கு தள்ளப்படுகின்றன. மேலும் மக்கள் மீது நிதி சுமையை ஏற்றிட  நிர்ப்பந்திக்கப்படுகிறது. ஊரடங்கு காலத்தில்  அரசின்  மதுகடைகளை திறக்கும் முடிவு கண்டனத்திற்குறியது. மதுக்கடைகளை திறக்கும் முடிவை அரசு  உடனே கைவிட வேண்டும். மத்திய அரசு டன் போராடி நிதியினை பெற  தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். மாநில உரிமை, பொரு ளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரம் பாதுகாத்திட ஒத்த கருத்துடைய கட்சிகளும்,  ஜனநாயக இயக்கங்களும் இணைந்து போராட  முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;