tamilnadu

img

வேதாரணியத்தில் மழையால் வீடு இடிந்து இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிடுக: சிபிஎம் வலியுறுத்தல்

நாகப்பட்டினம், ஏப்.20-நாகை மாவட்டம் வேதாரணி யம் ஒன்றியம், ஆயக்காரன்புலம் 2-ஆம் சேத்தி கிராமத்தில், வியாழக்கிழமை இரவு, இடி மின்னலுடன் பெய்த மழையில், வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த 15 பேர் இடி, மின்னல் தாக்கிப் பாதிக்கப்பட்டனர். வாய்மேடு- சிந்தாமணிக்காடு பகுதியைச் சேர்ந்த மோசமான காலனி வீட்டில் வசித்த, காசியம்மாள் என்ற 60 வயது தலித் பெண் வீட்டில் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த போது சிமெண்ட் கூரை இடிந்து விழுந்ததில் பலியானார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பின ருமான வி.மாரிமுத்து, வேதாரணியம் ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி, மாவட்டக்குழு உறுப்பினர் மா.முத்துராமலிங்கம் உள்ளி ட்டோர் வேதாரணியம் அரசு மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து வீடு இடிந்து இறந்த காசியம்மாள் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.இதன்பின் சி.பி.எம். தலை வர்கள், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்களைச் சந்தித்து, இடி மின்னலில் பாதிக்கப்பட்டோருக்கும், இறந்த காசியம்மாள் குடும்பத்தினருக்கும் உடனடியாக இழப்பீடு வழங்கி உதவிட வேண்டும் என்று கூறி கோரிக்கை மனு அளித்தனர்.

;