tamilnadu

கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை! நடவடிக்கை எடுத்திடுக!! கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தேனி, மே 10- விவசாயிகளிடம் வெட்டிய கரும்புக்கு பணம் தராமல் வஞ்சிக்கும் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து விவசாயி களுக்கு பண பட்டுவாடா செய்யவேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் டி.கண்ணன், தேனி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரி வித்துள்ளதாவது: ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை கடந்தாண்டு வெட்டிய கரும்புக்கு விவசாயிகளுக்கு ரூபாய் ஆறுகோடியே ஐம்பதுலட்சம் வரை இது வரை தரவில்லை. கொரோனா ஊரடங்கி னால் இன்னலுக்கு ஆளாகியுள்ள கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் பணம் கொடுத்தால் இந்த நேரம் ஆறுதலாக இருக் கும்.

பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை நிர்வாகம் விவ சாயிகளை வஞ்சித்து வருகிறது. எனவே கரும்பு விவசாயிகளுக்கு, தாங்கள் தலை யிட்டு வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் நட வடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும் எனவும், சமீபத்தில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு படி நான்கு பருவ ஆண்டுகள் தரவேண்டியமாநில அரசு பரிந்துரை விலைபாக்கி முப்பது கோடிக்கு மேல் தரவேண்டியுள்ள பாக்கிபணத்தையும் பெற்று தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள் ளார்.

;