tamilnadu

திருப்பதி கோவிலுக்கு சொந்தமான 1300 கிலோ தங்கம் பறிமுதல்

திருவள்ளூர், ஏப். 18- தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்கும் நோக்கில், திருவள்ளூர் மாவட்டத்தில் தேர் தல் நிலை கண்காணிப்புக் குழுவினர், பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது, வாகனங்களில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப் படும் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில், புதன் இரவு , திருவள்ளூர் அருகே புதுசத்திரம் பகுதியில் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லப்பாண்டியன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையிலிருந்து, ஆந்திர மாநிலம் திருப்பதி நோக்கிச் சென்ற 2 வேன்களை மறித்து, பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.அச்சோதனையில், வேன்களில் இருந்த 50-க்கும் மேற்பட்ட இரும்பு பெட்டிகளில் 1,381 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்தது. அப்போது, காரில் இருந்த ஆயுதம் ஏந்திய காவலர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட 6 பேர், உரிய ஆவணங்களுடன், பஞ்சாப் நேஷனல் வங்கி மூலமாக திருப்பதி தேவஸ்தானத் துக்கு தங்கக் கட்டிகளை எடுத்துச் செல்வதாகத் தெரிவித்தனர். சென்னையில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் இந்த தங்கம் வைக்கப் பட்டிருந்ததாகவும் அதற்கான காலம் முடிந்ததால் தேவஸ் தானத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர்கள் கூறினர்.இருப்பினும், தங்கக் கட்டிகள் மற்றும் 2 வேன்களை பறிமுதல் செய்தனர்.

;