tamilnadu

img

அப்பழுக்கற்ற களப் போராளி ப.கு.சத்தியமூர்த்தி.... படத்திறப்பு விழாவில் கே.பாலகிருஷ்ணன் புகழாரம்...

திருப்பூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினர் ப.கு.சத்தியமூர்த்தி ஐம்பது ஆண்டு காலப் பொது வாழ்வில் அப்பழுக்கற்ற களப் போராளியாக வாழ்ந்திருக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராகவும், பல்லடம் வட்டாரத்தில் மக்கள் இயக் கத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த ப.கு.சத்தியமூர்த்தி கடந்த மே 3ஆம் தேதி கொரோனா தொற்று பாதிப்பினால் காலமானார். அவரது உருவப் 
படம் திறப்பு மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி பல்லடம் பி.எம்.ஆர்.சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று, தோழர் ப.கு.சத்தியமூர்த்தியின் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். 

அப்போது அவர் கூறுகையில், ப.கு.சத்தியமூர்த்தி இந்த வட்டாரத்தில் விசைத்தறி தொழிலாளர் போராட்டம், சாதி பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளில் சாமானிய மக்களின் பக்கம் நின்று எண்ணற்ற போராட்டங்களில் தலைமை தாங்கி வழிகாட்டி இருக்கிறார். அவரது உயிருக்கு மிரட்டல் வந்தபோதும் அடிபணியாமல் நெஞ்சு நிமிர்த்தி நின்றவர். அவர் இப்படிப் பணியாற்ற அவரது குடும்பத்தார் பின்புலமாக இருந்திருக்கின்றனர். அவர் கோபுரமாகத் திகழ்வதற்கு அவரது துணைவியார் அடிபீடமாக இருந்திருக்கிறார். அவரது குடும்பத்தார், உறவினர்கள் திரைத்துறை, தமிழ் இலக்கியம் என பல துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர்களாக, பண்பட்ட குடும்பத்தினராக இருக்கின்றனர். இந்த பின்னணியில் இருந்து நம் இயக்கத்திற்கு வந்து கட்சியை வளர்ப்பதில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்.

கொரோனா தொற்று தற்போது நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. பல நாடுகள் இதை எதிர்த்துப் போராடி கட்டுப்படுத்தி, மக்களைக் காப்பாற்றி வருகின்றன. ஆனால் இந்தியாவில் எந்த நேரமும் சந்திக்கும் ஆபத்தாக இந்த தொற்று தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு அந்த கிருமி காரணமல்ல, அதை கட்டுப்படுத்த செயல்படாத, கையாலாகாத ஒன்றிய அரசு இருப்பதுதான் காரணம். இதில் நாம் பல அருமையான தோழர்களை இழந்திருக்கிறோம். ப.கு.சத்தியமூர்த்தி அரசியலுக்கு அப்பாற்பட்டு களத்தில் நிற்கும் சிப்பாயாக இருந்திருக்கிறார். ஏழை, எளிய உழைப்பாளி, நடுத்தர மக்களின் உதவிக்கு, நல்ல அரசியல் வெற்றி பெற வேண்டும் என்பதற்கு மகத்தான தியாக வாழ்வு வாழ்ந்திருக்கிறார். சோதனையான காலத்தில் இப்ப
டிப்பட்ட தோழர்களின் இழப்பு எப்படி இதுபோன்ற தோழர்கள் கிடைப்பார் கள் என்ற ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. 

தங்கள் மறைவுக்குப் பிறகும் மக்களின் இதயத்தில் வாழ்பவர்கள் தான் மரணமில்லாத வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று வள்ளலார் சொல்லி இருக்கிறார். அதுபோன்ற வாழ்வை ப.கு.சத்தியமூர்த்தி வாழ்ந்திருக்கிறார். இத்தகையவர்கள் இயக்கத் தில் இருப்பதால் இயக்கத்திற்குப் பெருமை. அவரது குடும்பத்துக்கு கட்சி எப்போதும் பக்க பலமாக இருக்கும். அவர் எந்த லட்சியத்திற்காக பாடுபட்டாரோ அந்த லட்சியத்துக்காக நாம் ஒவ்வொருவரும் அவரதுநினைவுகளை இதயத்தில் ஏந்தி பணியாற்றுவோம். அவர் தற்போது படமாக இருந் தாலும் நமக்கு பாடமாக திகழ்வார். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.முன்னதாக, மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், திருப் பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் ப.கு.சத்தியமூர்த்தியின் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினர். 

கட்சியில் சேர்ந்தபோது எந்த உணர் வுடன் இருந்தாரோ அதே உணர்வுடன் கடைசி மூச்சுவரை அசைக்க முடியாத நம்பிக்கையுடன் பணியாற்றினார். கட்சியின் நிலைப்பாட்டில் உறுதியாக நின்று கொண்டே மற்ற கட்சியினருடனும் இணக்கமாக பணியாற்றிய திறன் வாய்ந்த தோழர், அனைவரையும் மதிக்கும் பண்பாளர் என்று அவர் கள் புகழாரம் சூட்டினர்.இந்த நிகழ்வில் ப.கு.சத்தியமூர்த்தியுடன் மாணவப் பருவத்தில் இருந்து இணைந்து பணியாற்றிய திமுக மூத்த தலைவரும், முன்னாள் நகர்மன்றத் தலைவருமான ராமமூர்த்தி, பல்லடம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம், திமுக நகரப் பொறுப்பாளர் ராஜேந்திரகுமார், காங்கிரஸ் நகரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மதிமுக நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஷாகுல்ஹமீது, விடுதலை சிறுத்தைகள் பல்லடம் தொகுதி பொறுப்பாளர் ஓ.ரங்கசாமி, மதச்சார் பற்ற ஜனதாதளம் நிர்வாகி மு.பாலசுப்பிரமணியம், மருத்துவர்கள் சங்க நிர்வாகி டாக்டர் ராஜ்குமார் உள்பட பல்வேறு அரசியல் இயக்கங்களின் நிர்வாகிகள், ப.கு.சத்தியமூர்த்தி மகன் நாகேந்திரன், மருமகள் பிரியா உள்பட குடும்பத்தார், உறவினர்கள், மார்க்சிஸ்ட் கட்சியினர், பல்லடம் வட்டாரத்தைச் சேர்ந்த பொது மக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

;