tamilnadu

img

மோடி ஆட்சி வெளியேற 3 காரணம்

திருச்சிராப்பள்ளி,ஏப்.16-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிவேட்பாளர் பாரிவேந்தர் செவ்வாயன்று திருச்சி துறையூர் சட்டமன்ற தொகுதிக்குஉட்பட்ட சோபனபுரம் உள்ளிட்ட பகுதிகளில்பிரச்சாரம் வாக்கு சேகரித்தார். இதில் பாரிவேந்தர் பேசுகையில், மோடியை ஆட்சியில்இருந்த வெளியேற்ற 3 காரணம் உள்ளது.சிலிண்டர் விலை இருமடங்கு உயர்வு. பண மதிப்பிழப்பு. ஜி.எஸ்.டியால் அனைத்துதரப்பு வணிகர்களும் பாதிப்பு. 2018-ம் ஆண்டில் மட்டும் மோடி ஆட்சியில் 1 கோடிபேர் வேலை இழந்துள்ளனர். மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் சாமானிய மக்கள்வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள் ளது என்றார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழநிசாமி,துறையூர் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். 


சிபிஎம் பிரச்சாரம்


மேலும் பாரிவேந்தரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர்மாவட்டக்குழு சார்பில் கடந்த 8 நாட்களாக 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்தின் நிறைவு நாளான செவ்வாயன்று முசிறி பிரிவு ரோட்டில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் நல்லுசாமி தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், கிருஷ்ணன், ராஜா மற்றும் காங்கிரஸ், விடுதலைசிறுத்தை கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.


;