tamilnadu

img

நாகையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க கோரிக்கை

நாகப்பட்டினம், செப்.15- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட 13-வது மாநாடு, நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்கக் கூட்ட அரங்கில் சனிக்கிழமை அன்று மாவட்ட மகளிர் மாநாடாகத் துவங்கியது. இரண்டாம் நாள் மாநாடு, ஞாயிறு காலை கொடியேற்றம், அஞ்சலி நிகழ்வுகளுக்குப் பின், பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்டத் தலைவர் ப.அந்துவன்சேரல் தலைமை வகித்தார். வரவேற்புக்குழுத் தலைவர் சு.சிவகுமார் வரவேற்புரையாற்றினார். மாநிலத் துணைத் தலைவர் எஸ்.பார்த்திபன் மாநாட்டைத் துவக்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன் வேலை அறிக்கையும், பொருளாளர் பா.இராணி நிதிநிலை அறிக்கையும் முன்வைத்தனர். மாவட்ட, வட்ட நிர்வாகிகள் எஸ்.ஜோதிமணி, ஆர்.காயாம்பூ, அ.செளந்தரராஜன், து.விஜயராகவன், எஸ்.ஆர்.பாஸ்கரன்,  சி.குருபிரசாத், எம்.தமிழ்வாணன், பழ.பக்கிரிசாமி, என்.புகழேந்தி, எஸ்.தென்னரசு, எம்.தெட்சிணாமூர்த்தி, எஸ்.கலைச்செல்வன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். தோழமைச் சங்க நிர்வாகிகள் சீனி.மணி, சொ.கிருஷ்ணமூர்த்தி, வி.பாலசுப்பிரமணியன், எல்.பிரேம்சந்திரன், சு.மணி, எம்.காந்தி, எஸ்.ஆர்.ராஜேந்திரன், ப.ஜீவானந்தம், எம்.மேகநாதன், எஸ்,மோகன், வி.தேன்மொழி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் மு.அன்பரசு நிறைவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன் நன்றி கூறினார். நாகை மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி அமைத்திட வேண்டும். சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் மு.சுப்பிரமணியனின் இடைப் பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய முறையையே செயற்படுத்திட வேண்டும். நாகை மாவட்டம் முழுவதும் பழுதாகிக் கிடக்கின்ற சாலைகளைச் செப்பனிட வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் தொகுப்பூதிய முறையில் பணியாற்றும் ஊழியர்களை நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியத்தை நிர்ணயம் செய்திட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவராக து.இளவரசன், மாவட்டச் செயலாளராக ஏ.டி.அன்பழகன், பொருளாளராக ப.அந்துவன்சேரல், மாவட்டத் துணைத் தலைவர்களாக பா.இராணி, கே.இராஜு, சி.வாசுகி, வேல்கண்ணன், மாவட்ட இணைச் செயலாளர்களாக எம்.நடராஜன், ஆர்.கலா, என்.புகழேந்தி, ஜம்ரூத்நிசா, தணிக்கையாளர்களாக வி.எஸ்.ராமமூர்த்தி, எம்.ராமச்சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;