tamilnadu

தஞ்சையில் இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மாநாடு தொடக்கம்

தஞ்சாவூர்:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 13 ஆவது மாநில மாநாடு, வெள்ளியன்று  காலையில் தஞ்சை ஜெயராம் மஹால் தோழர் வெ.கோபால்சாமி நினைவரங்கில் கொடியேற்றத்துடன்  தொடங்குகிறது. மாநிலத் தலைவர் ஆ.செல்வம் தலைமை வகிக்கிறார். வரவேற்பு குழு தலைவர் இரா.தமிழ்மணி வரவேற்புரையாற்றுகிறார். மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஏ.ஸ்ரீகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். தமுஎகச மாநில துணைத் தலைவர் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் கருத்துரையாற்றுகிறார். 

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ச.மயில், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் கு.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். மாநில பொதுச்செயலாளர் மு.அன்பரசு, மாநிலப் பொருளாளர் எம்.தங்கராஜ், மாநிலச் செயலாளர் எம்.சௌந்தரராஜன் ஆகியோர் பல்வேறு அமர்வுகளில் பங்கேற்கின்றனர். சனியன்று (செப்.28) காலை அறிக்கை முன் வைத்தல் அதன் மீது விவாதம், தீர்மானங்கள் முன்மொழிதல் ஆகியவை நடைபெறுகின்றன. மாலையில் மகளிர் அமர்வும் நடைபெறுகிறது. அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, மாநில துணைத் தலைவர் எஸ்.தமிழ்செல்வி, மாநிலச் செயலாளர் தி.கலைச்செல்வி மற்றும் மாநில துணைத் தலைவர்கள், மாநிலச் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். நிறைவாக மாநில மகளிர் துணைக்குழு ச.செல்வி நன்றி கூறுகிறார். 

ஞாயிறு (செப்.29) அன்று புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு நடைபெறுகிறது. தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பு துணைத் தலைவர் க.சுவாமிநாதன் நிறைவுரையாற்றுகிறார். மாநிலச் செயலாளர் இரா.பன்னீர்செல்வம் நன்றி கூறுகிறார். அன்று மாலை மாபெரும் பேரணி மற்றும் பொது மாநாடு நடைபெற உள்ளது. சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் சிறப்புரையாற்றுகிறார். அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ஆ.செல்வம், வரவேற்பு குழுத் தலைவர் இரா.தமிழ்மணி, பொதுச் செயலாளர் மு.அன்பரசு, மாவட்டச் செயலாளர் ஆ.ரெங்கசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

;