tamilnadu

img

ஏலச்சீட்டு நடத்தி மோசடி பாதிக்கப்பட்ட மக்கள் புகார் மனு

தஞ்சாவூர், நவ.9- கும்பகோணம் அருகே ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த நபரிடம், பணத்தை மீட்டுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் திங் கள்கிழமை அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் ஆகி யோரிடம் மனு அளித்தனர்.  மாங்குடி எஸ்.முருகே சன் மற்றும் நூற்றுக்க ணக்கான பொதுமக்கள் கையெழுத்திட்ட அம்மனு வில் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் தாலுகா பவுண் ரிங்கபுரம் மேலத் தெருவில் வசிக்கும் பாலகிருஷ்ணன் மகன் பி.காசிநாதன் என்ப வர் இப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஏலச்சீட்டு கம்பெனி நடத்தி வந்தார்.  அவரிடம் பவுண்ரிங்க புரம், மாங்குடி, கந்தன்தோட் டம், திருநாகேஸ்வரம் மற்றும் சுற்று வட்டார பகுதி யில் வசித்து வரும் 250 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அன்றாடங் காய்ச்சிகள், சாதாரண விவசாயிகள், சேமிப்பு நோக்கில், ஏலச் சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்துள்ளனர். அவர்களில் சிலருக்கு சீட்டு முடிந்தும் பணம் தரவில்லை. பலர் பல தவணைகள் கட்டி யுள்ளனர். இந்நிலையில் ஒரு வருக்கும் பணம் தராமல், மேலும் சிலரிடம் கடனாக வும் பெற்றுக் கொண்டு சுமார் ரூ.5 கோடி அளவிற்கு மோசடி செய்து பொதுமக்களுக்கு தெரியாமல் தலைமறைவாகி விட்டார்.  அவர் வீட்டில் உள்ளவர்க ளிடம் சீட்டு போட்டவர்கள் சென்று கேட்ட போது பொறுப்பாக பதில் அளிக்க மறுக்கிறார்கள். விவசாயம் செய்து சிறுகச் சிறுக சேர்த்த தொகையினை இழந்து விட்டு விவசாயிகளும், சாதாரண பொதுமக்களும் துன்பப்படுகின்றனர். எனவே, தாங்கள் இதில் நேரடியாகத் தலையிட்டு பண மோசடி செய்த காசிநாதனை கண்டுபிடித்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற் கொண்டு எங்களது பணத்தை மீட்டுத்தர ஆவன செய்திட வேண்டுகிறோம்” இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.  அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவிடை மருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் சா.ஜீவபாரதி, ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன், சிஐடியு மாவட் டச் செயலாளர் சி.ஜெய பால், மாவட்ட துணைச் செய லாளர்கள் கே.அன்பு, ஆர்.சேகர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் உடனிருந்தனர்.

;