tamilnadu

வெள்ளை அறிக்கை வெளியிட தயார்: எடப்பாடிக்கு அமைச்சர் பதிலடி...

சென்னை:
கொரோனா தடுப்பூசி விவரங்களை வெள்ளை அறிக்கை மூலம் வெளியிடத் தயார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தடுப்பூசி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுள் ளார். கடந்த கால மருத்துவத்துறையின் செயல் பாட்டை அவரே அறிந்து கொள்ள வேண்டும் என விரும்புவதால், அதை சொல்லுவது அவசியமானது.தமிழகத்துக்கு இதுவரை 1 கோடி 80 லட்சத்து 32,170 தடுப்பூசிகள் வந்துள்ளது. அதில் 1 கோடி 76 லட்சத்து 19,174 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள் ளது. கையிருப்பில் 7 லட்சத்து 15,570 தடுப்பூசிகள் உள்ளன.ஜனவரி 16 முதல் மே 7-ஆம் தேதி வரை, எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராகப் பொறுப் பேற்றிருந்த அந்த 103 நாள்களில் 63 லட்சத்து 28,407 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாளொன் றுக்கு 61,441 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலினின் தீவிர நடவடிக்கையாலும், விழிப்புணர்வு காரணமாகவும், தினசரி தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் சராசரி எண்ணிக்கை 1 லட்சத்து 61,297 ஆக உள்ளது.70 நாள்களில் 1 கோடியே 12 லட்சத்து 90,767 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் இருந்த போது தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. ஒன்றிய அரசிடம் எவ்வளவு தடுப்பூசி கேட்டிருந்தாலும், கொடுப்பதற்கு தயாராகவே இருந்தது. அந்த வகையில் அவர் களிடம் கூடுதலாகவே தடுப்பூசி கேட்டு, இன்னும் கூடுதலாகவே தடுப்பூசியை செலுத்தியிருக்கலாம்.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி விரும்பினால், மாவட்டம்தோறும் தடுப்பூசி விவரங் களை வெள்ளை அறிக்கையாகத் தர தயாராக இருக்கிறோம். அதிமுக ஆட்சியில் 6 சதவீத தடுப்பூசி 
வீணாக்கப்பட்டது. அதன்படி 4 லட்சத்து 34,838 தடுப்பூசிகள் அடங்கும்.எதிர்க்கட்சி தலைவர் விரும்பினால், அவரது முன்னிலையே வெள்ளை அறிக்கை தயாராக இருக்கிறேன். அவர்களே கேட்ட பிறகு வெள்ளை அறிக்கையை சட்டப்பேரவையிலும் கொடுக்க தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

;