tamilnadu

img

சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

மதுரை, ஜூலை 15- அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். போக்குவரத்துத் தொழிலா ளர்களுக்கு கொரோனா நோய் பரவ லில் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண் டும். பேரிடர் காலத்தில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளிகளுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டு மென வலியுறுத்தி மதுரையில் மதுரை அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் அனைத்து சங்க கூட்டமைப்புகள் சார்பில் மதுரை மண்டலம் தலைமை யகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதே போல் தேனி, திண் டுக்கல்லிலும் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து கோரிக்கை மனுவை அனைத்து சங்க நிர்வாகிகள் கிளை மேலாளரிடம் வழங்கினர்.

தேனி

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், தேனி, போடி, தேவாரம், கம்பம் லோயர் ஆகிய கிளைகளில் ஆர்ப்பாட்டமும் பின்னர் அனைத்து சங்கங்கள் சார்பில் கிளை மேலாளரிடம் மனுவும் அளிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் தேனி மாவட்ட சிஐடியு உதவிச் செய லாளர் ஏ.முருகவேல், சிஐடியு தலை வர்கள் ஜி.மணிகண்டன், ஆர்.மணி மாறன், சோலை ஜி.கணேஷ் ராம், எஸ்.பாக்கியசெல்வம், சுப்பிரமணி ஆகியோரும் மற்றும் பெருந்திரளான தொழிலாளர்களும் கலந்து கொண்ட னர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் திண் டுக்கல் 1,2,3, வேடசந்தூர், நத்தம், ஒட் டன்சத்திரம், பழனி, வத்தலகுண்டு ஆகிய பணிமனைகளில் ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றன. இதனையடுத்து பொது மேலாளருக்கு கிளை மேலா ளர்கள் மூலம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. சிஐடியு, எல்.பி.எப், ஐ.என்.டி.யு.சி. எச்.எம்.எஸ், திராவிட தொழிலாளர் சங்கம், புரட்சி யாளர் அம்பேத்கர் தொழிலாளர் விடு தலை முன்னணி, ஸ்டாப் யூனியன் ஆகிய அமைப்புகள் சார்பாக மனுக் கொடுக்கப்பட்டது. சிஐடியு சார்பாக கோட்டத்தலைவர் ஐ.ஜெயக்குமார், பொதுச்செயலாளர் என்.ராமநாதன், பொருளாளர் எஸ்.ஜோசப் அருளானந் தம், மற்றும் மத்திய சங்க நிர்வாகி கள் இந்த போராட்டங்களில் பங்கேற்ற னர்.
 

;