tamilnadu

வெயிலின் தாக்கம் மேலும் 2 வாரத்துக்கு நீடிக்கும்

சென்னை, ஏப்.24- தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு கடுமையாக உள்ளது. இயல்பை  விட 4, 5 டிகிரி செல்சியஸ் வெயில் அதிக மாக இருப்பதால் மக்கள் பெரும் அவ திப்பட்டு வருகின்றனர்.

வட உள் மாவட்டங்களில் வெப்ப அலை  தாக்கி வருகிறது. ஈரோடு, சேலம், தரும புரி, வேலூர், திருச்சி, கரூர், மதுரை, திருப்  பத்தூர், கோவை, நாமக்கல் மாவட்டங்க ளில் 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெயில்  சுட்டெரிக்கிறது.

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் தமிழக உள் மாவட்டங்களில் 39  முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்  என்றும் வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.

கோடை மழைக்கான வாய்ப்பு குறைவே!
அதிகரிக்கும் வெப்பம் குறித்து தனி யார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜானும்  பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

“தமிழகத்தின் வட உள் மாவட்டங்க ளில் வெயிலின் தாக்கம் மேலும் 2 வாரங்க ளுக்கு நீடிக்கும். சேலம், ஈரோடு, நாமக்கல்,  வேலூர் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்க ளில் தற்போது உள்ள வெப்ப நிலை நீடிக்கும். கோடை மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

உள் மாவட்டங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்யக்கூடும். 5 அல்லது 10 நிமிடங்கள் தான் மழை பெய்யும். தமி ழகத்தில் தொடர்ந்து வறண்ட வானிலை காணப்படுவதால் பெரிய அளவில் கோடை மழைக்கு வாய்ப்பு குறைவு. கட லோர மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்க ளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்  கும். சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 36, 38 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பம் உள்ளது. 

மே முதல் வாரத்தில் இருந்து மேற்குத்  திசைக் காற்று, தரைக்காற்று கடலோர மாவட்டங்களுக்கு வரக்கூடும் என்பதால் வெப்பம் அதிகரிக்கும்.

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித் துள்ளார்.

;