tamilnadu

img

3 ஆண்டு சிறை; ரூ. 10 லட்சம் வரை அபராதம்

சென்னை, மே 3- ஆன்லைன் சூதாட்டம், வாய்ப்பு விளையாட்டு ஆகியவை தொடர்பான விளம்ப ரங்களை ஒளிபரப்புவோர், பிரபலங்கள், விளம்பர நிறுவனங்கள், விளம்பர தயாரிப்பாளர்கள், சமூக ஊடகங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணைய தலைவர் வெளி யிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

தமிழ்நாடு இணையவழி சூதாட்டத் தடை மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் படி, இணைய வழி சூதாட்டம் மற்றும் இணையவழி வாய்ப்பு  விளையாட்டு, பந்தயம் போன்றவற்றை விளையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தடை செய்யப்பட்ட இணையவழி சூதாட்டங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றம் செய்பவர்களுக்கு 3 மாதம் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இணையவழி சூதாட்டம் அல்லது இணையவழி வாய்ப்பு விளையாட்டுகள்  பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நிதி நிறு வனங்கள், கட்டண நுழைவாயில்கள் இச்சட்டம் தடைசெய்கிறது.

இணையவழி சூதாட்டங்கள் அல்லது வாய்ப்பு அடிப்படையில் இணையவழி விளையாட்டுகள் குறித்த விளம்பரங்களும் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் அல்லது பிற வழிகளில் இணையவழி சூதாட்டத் தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது தூண்டும் வகையில் எந்த ஒரு நபரும் மின்னணு தொடர்பு சாதனங்கள் உட்பட எந்த  ஒரு ஊடகத்திலும் விளம்பரம் அறிவிப்போ செய்யக் கூடாது.

அத்தகைய விளம்பரத்தில் ஈடுபடும் நபர் அல்லது நிறுவனத்துக்கு, ஓராண்டு வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும். அதே குற்றத்தை மீண்டும் செய்தால், 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை  தண்டனை மற்றும் ரூ. 5 முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இணையவழி சூதாட்டம், பந்தய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை பகிர விரும்புவோர் அல்லது இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்க விரும்பு வோர் அல்லது இது சம்பந்தமாக வேறு ஏதேனும் குறைகள் இருப்பின் “www.tnonlinegamingautho rity.com என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ள லாம். மேலும் இணையவழி விளையாட்டு ஆணையத்தின் tnoga@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;