tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழ்நாடு மற்றும் கிழக்குப் பகுதி மாநிலங்க ளில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஒடிஷா தலைநகர் புவனேஸ்வர் மற்றும் ஆந்திர மாநிலத்தின் முக்கிய நகரான கடப்பாவில் 111 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவானது கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. அதே போல தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோட்டில் 108  பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது.

ராகுல்காந்தி மீதுள்ள அச்சம் காரணமாகவே மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  தெரிவித்துள்ளார். 

பாபாசாகேப் அம்பேத்கரே வந்து வலி யுறுத்தினாலும் அரசமைப்புச் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தில்லி  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் மேலும்  14 நாட்கள் (மே 7 வரை) நீட்டித்து தில்லி நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே போல பிஆர்எஸ்  கட்சியின் மூத்த தலைவரான கவிதாவுக்கும் நீதி மன்ற காவலை மே 7 வரை தில்லி நீதிமன்றம் நீட்டித்தது.

இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே (நெட்  இல்லாமல்) வாட்ஸ்அப் மூலம் தகவல், படம்  அனுப்பும் வசதி விரைவில் வரவுள்ளது என  டபுள்யு.ஏ.பீட்டா இன்போ தகவல் தெரிவித்துள் ளது. டபுள்யு.ஏ.பீட்டா இன்போ (wabeta info)  என்பது வாட்ஸ் ஆப் மேற்கொண்டுள்ள மேம்பாட்டு  ஆய்வுகள் பற்றி தகவல்களை தெரிவிக்கும் அமைப்பாகும். புதிய வசதி வாட்ஸ் ஆப்பில் அறி முகம் செய்யப்பட்டால் நெட் இல்லாமலே வீடியோ,  படங்கள், தகவல்களை அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பி.சந்திரசேகர் தனக்கு  ரூ.5,785 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்ப தாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நன்கு அறி யப்பட்ட இந்திய மசாலா பிராண்டுகளான எம்டிஎச் (MDH) மற்றும் எவரெஸ்ட் குழுமங்களின் தயா ரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் பூச்சிக்  கொல்லி இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள  நிலையில், அவற்றின் தரச் சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

கொல்லம்
எதிர்க்கட்சியினர் தாக்கியதாகக் கூறிய பாஜக வேட்பாளரின் நாடகம் அம்பலம்
கேரள போலீசார் எச்சரிக்கை

20 தொகுதிகளைக் கொண்ட கேரள  மாநிலத்தில் வரும் ஏப்ரல் 26  அன்று ஒரே கட்டமாக மக்கள வைத் தேர்தல் நடைபெற உள்ளது. கேர ளாவில் ஆளும் இடது முன்னணி - காங்கி ரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி  உள்ள நிலையில், நாங்களும் போட்டி யில் இருக்கிறோம் என்று கூறி பாஜக  பெயரளவில் வேட்பாளரை களமிறக்கி யுள்ளது. ஆனால் கேரளாவில் பாஜக விற்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என  பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் வெளியாகி வரும் சூழலை மறைக்க வழக்  கம் போல பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி யில் பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது.

இந்நிலையில், நடிகரும், கொல்லம்  பாஜக வேட்பாளருமான கிருஷ்ணகுமார் தன்னை சிபிஎம், காங்கிரஸ் தொண்டர் கள் தாக்கியதாகவும், கண்ணில் காயம்  ஏற்பட்டதாக பிளாஸ்திரியுடன் சமூக வலைத்தளங்களில் புகைப்படம்  ஒன்றை  பதிவிட்டு இருந்தார். தங்கள் உடனே இருக்கும் கிருஷ்ணகுமாரை யார் தாக்கி யது? எப்படி அவருக்கு கண்ணில் காயம் பட்டது? என போலீசாருக்கு சந்தேகம் வலுக்க பாஜக தொண்டர் சனல் என்ப வரை அழைத்து மறைமுகமாக விசா ரணை நடத்தினர். விசாரணை முடிவில்  கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால்  நான் தான் தவறுதலாக குத்திவிட்டதாக  பாஜக தொண்டர் சனல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன்மூலம் தவறுதலாக ஏற்பட்ட காயத்தை எதிர்க்கட்சியினர் தாக்கியதாக தேர்தலுக்காக கிருஷ்ண குமார் நாடகமாடியது அம்பலமானது. இதையடுத்து, கிருஷ்ணகுமாருக்கு கேரள போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுதில்லி
அதானி நிறுவன மோசடி 
செபி விசாரணை அறிக்கையை வெளியிடுக!

பங்குச்சந்தையில் அதானி நிறுவனம் மோசடி செய்துள்ள நிலையில், அதானி குழுமத்தில் முதலீடு செய்  துள்ள எப்.பி.ஐ. நிறுவனங்கள் விதிமீற லில் ஈடுபட்டுள்ளதாகவும், அதானி நிறு வனத்தில் முதலீடு செய்துள்ள 10-க்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் முக்கிய தகவல்  களை மறைத்துள்ளதாகவும்,  அதானி நிறுவனத்தில் முதலீட்டு வரம்புகள் மீறப்  பட்டுள்ளதாக  செபி ஆய்வில் அம்பல மாகியுள்ளது. ஆனால் அதானி நிறுவன  மோசடி குறித்த விசாரணை அறிக்கை செபி இன்னும் முழுமையாக வெளியிட வில்லை.

இந்நிலையில், அதானி நிறுவன மோசடி குறித்த விசாரணை அறிக்கை யை செபி வெளியிட வேண்டும் என காங்கி ரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “பிர தமர் மோடியின் நெருக்கமான நண்பரான  அதானியின் சட்டவிரோத செயல்களுக்கு  இனியும் பாதுகாப்பாக இருக்க முடியாது.  செபி விசாரணை அறிக்கையின் முழு விவரத்தை வெளியிட வேண்டும். அதானி  நிறுவனத்தில் முறைகேடு நடக்கவில்லை என செபி கூறி வந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அழுத்தத்தினால் விசா ரணை நடைபெற்றது. விதிகளை மீறி  பங்குச்சந்தையில் அதானி நிறுவனம் முத லீடு செய்து முறைகேடு செய்துள்ளதை செபி கண்டறிந்துள்ளது. விசாரணை யில் முறைகேட்டுக்கு ஆதாரம் கண்டறி யப்பட்டுள்ளதால் விசாரணை அறிக்கை யை வெளியிட வேண்டும். முக்கியமாக  “இந்தியா” கூட்டணி ஆட்சிக்கு வந்த வுடன் அதானி நிறுவன மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்படும். அதானி நிறுவனத்தின் முறைகேடுகள் அனைத்தையும் நாடாளு மன்ற கூட்டுக்குழு விசாரணை அம்ப லப்படுத்தும்” என கூறியுள்ளார்.

;