tamilnadu

img

பாலியல் வன்முறைக்கு எதிராக கருத்தியல் போராட்டம் அவசியம்

பாராட்டு விழாவில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை, திரைப்பட இயக்குநர் கோபி நயினார், தீஒமு மதிப்புறு தலைவர் எஸ்.கே.மகேந்திரன், தலைவர் த.செல்லகண்ணு, பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ், மாதர் சங்க தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச் செயலாளர் அ.ராதிகா, வழக்கறிஞர் எஸ்.அபிராமன் மற்றும் இ.மோகனா, வி.ஜானகிராமன், க.சுவாமிநாதன், பி.சுகந்தி, பி.செல்வன், ச.லெனின்,  கே.மணிகண்டன், வி.ஆனந்தன், கா.வேணி, எம்.ராஜ்குமார் மற்றும் சிறுமியின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

சென்னை, மே 5 - அரியலூர் தலித் சிறுமி வன்கொடு மை வழக்கில் நீதிக்காகப் போராடிய வழக்கறிஞர்களுக்கு பாராட்டுக் கூட்டம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சென்னை ஓட்டேரியில் வியாழ னன்று (மே 2) நடைபெற்றது. மாநில சிறப்புத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமை தாங்கினார்.

இதில் கலந்து கொண்டு சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகை பேசியதாவது,

“நான் பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்க்கும் போதெல்லாம் அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று எனக்கு தெரியாது. வழக்கு ஒவ்வொரு முறை வரும் போதும் வாய்தா வாங்கி விடுவார்கள். பெண்களுக்கு எதிரான வழக்கு வரும் போதெல்லாம் வழக்கமாக ஒரு நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதாவது இழப்பீடு பெறுவதற்காக தானே இதுபோன்ற சம்பவங்களை உருவாக்குகிறார்கள் என்கிறார்கள்.  பெண்ணின் நடத்தை தான் காரணம் என்று கூறுவதும், பெண்ணுக்கு எதிராக பெண் வழக்கறிஞர்களை நியமித்து இந்த வழக்கில் ஒன்றுமில்லை என கூற  வைப்பதும் அதிகார வர்க்கத்தின் வழக்க மான நடைமுறைகளாக உள்ளன.

குதர்க்கமான வாதம்
அதுபோல்தான் இந்த சிறுமி வழக்கிலும் எவ்வளவோ மூத்த வழக்கறி ஞர்கள் இருந்த போதிலும் நிர்மலா சம்பத் என்ற ஒரு பெண் வழக்கறிஞர் தான் நியமிக்கப்பட்டார். மாநில காவல்துறை திறம்பட புலனாய்வு மேற்கொண்டு வரு கிறது. எனவே இந்த வழக்கை சிபி சிஐடிக்கு மாற்றக் கூடாது என்று அவர் வாதிட்டார். ஆனால், அந்த சிறுமியின் குடும்பத்தினர் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த போராட்டத்தை நம்மால் தனியாக நடத்தியிருக்க முடியாது.

நியாயமான தீர்ப்பை பெற போராட்டம் 
 தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  போன்ற அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட்டங்கள் நடத்துபவர்கள். அதன் ஒரு பகுதி யாகத்தான் இந்த சிறுமி வழக்கிலும் நியாயம் கேட்டு போராடியுள்ளனர். இந்த போராட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்வது முக்கியம்.  வழக்கறி ஞர் அபிராமனை அரசு வழக்கறிஞராக நியமனம் செய்ததில் இந்த அமைப்பு களுக்கு முக்கிய பங்கு உள்ளது. நியாய மான தீர்ப்பு பெற வேண்டும் என்றாலே பல வகையான போராட்டங்களை பல கட்டங்களில் முன்னெடுக்க வேண்டி யுள்ளது.  

மாறி மாறி பேசிய நீதிபதி 
தலித் சமூகம் என்றாலே காவல்துறை, நீதிமன்றங்களின் பார்வை வேறு விதமாக உள்ளன. சட்டத்தில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி எப்படி குற்றவாளிகளை விடுவிக்கலாம், தண்டனையை குறைக்கலாம் என்பது தான் நீதிமன்றத்தின் அணுகுமுறையாக உள்ளது. இந்த வழக்கில்  நீதிபதி மாறி மாறி பேசியிருக்கிறார். 

14.1.2017 அன்று சிறுமி நிர்வாணமாக இறந்துள்ளார் எனத் தெரிய வரும் நிலையில், முதல் பத்தியில் ‘வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும்’ என்று கூறுகிறார். அடுத்த பத்தியில் ‘வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வராது’ என்று கூறுகிறார். அதாவது ‘தலித் என்று தெரிந்தே அவரை தீண்டியுள்ளார்’. ஆனால் இரண்டாவது பத்தியில் ‘தலித் என்ற காரணத்திற்காக கொலை செய்ததற்கான ஆதாரம் இல்லை, எனவே அது குற்றமில்லை’ என்று கூறுகிறார்.

சமூக பார்வை இல்லை 
 குற்றவாளி வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். பாதிக்கப்பட்டது தலித் பெண்.  அப்படியென்றால் தலித் என்ற உள்நோக்கத்தோடு கொலை செய்யப்பட வில்லை என்று கூறுவது எப்படி நியாய மாகும். சமூக பார்வை இல்லாததே இதற்கு காரணம். இவ்வாறு ஆர். வைகை பேசினார்.

வரும் காலங்களில் இதுபோன்ற சட்டப்போராட்டங்களுக்கு பாராட்டு விழா என்று நடத்துவதற்கு பதில் சமூக நீதிக்கான வெற்றி என்ற பெயரில் நடத்த வேண்டும்” என்றும் வைகை கேட்டுக் கொண்டார்.

;